கவிதைகள்

பதினொராம் ஆண்டில் கால்பதிக்கும் பாங்கான அக்கினிக்குஞ்சினை அகமார வாழ்த்தி!… மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

பதினொராம் ஆண்டதனில் பக்குவமாய் கால்பதிக்கும்  
பலபேரின் மனமுறையும் பாங்கான அக்கினிக்குஞ்சே 
நிலமீது பல்லாண்டு நீவளர வேண்டுமென 
உளமார உனைவாழ்த்தி உவகையினை அடைகின்றேன்       
 
பன்னாட்டுப் படைப்பாளர் பகருகின்ற சுவையனைத்தும்
என்னாளும் எங்களுக்கு இன்பமுடன் தருகின்றாய்
உன்வரவை ஆவலுடன் காத்திருக்கும் வாசகனாய்
உனைவாழ்த்தி மகிழுவதில் உவைகை மேலெழுகிறது 

 

காய்தல் உவத்தலின்றிக் களமமைத்துக் கொடுக்கின்றாய்
கவிதை வடிப்போரைக் கைதூக்கி விடுகின்றாய் 
ஆய்வுரைகள் தருகின்றாய் அரசியலும் சொல்லுகிறாய்
அனைவரதும் அகமுறைவாய் ஆசிகூறி வாழ்த்துகிறேன் 
 
எழுதுகின்றார் எழுச்சிபெற ஏற்றபல செய்கின்றாய்
வலுவுல்ல படைப்புகளை வாங்கியே பெறுகின்றாய்
பாஸ்கரெனும் ஆளுமையை பக்கம்நீ வைத்துள்ளாய்
பார்மீது நீவளர்க பண்பாடி வாழ்த்துகிறேன். 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *