கவிதைகள்
கலிகாலம்!…. ( கவிதை ) ….. செ.துஜியந்தன்.

கணினி வகுப்புக்குச் சென்ற மகள்
கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து நின்றாள்
எவனோ ஒருவன் விரித்த வலையில்
அவனே கதியென சென்றாளாம்
அதனால் மூன்று மாதம்
தீட்டுக்கு வரலையாம்
அவனும் இப்போ தொடர்பில் இல்லையாம்
மகள் சொல்லிய செய்தி கேட்டு
மண்டை விறைத்து மயக்கம் வந்தது
மகளை நினைத்து சினம் வந்தது
ஊர் உலகத்திற்கு பயந்தேன்
பழிச் சொல்லுக்கு அஞ்சினேன்
மகளை அழைத்தேன்
அவன் இருப்பிடம் கேட்டேன்
கணினியைக் காட்டி இதுதான் என்றாள்
கூர்ந்து பார்த்தேன்
அதில் பேஸ்புக் என்றிருந்தது
எனக்கோ திக் என்றது!
![]()
![]()