கவிதைகள்
தனியொரு துணிவே எஸ்பொ!….. ( கவிதை ) …… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

6ம் ஆண்டு நினைவஞ்சலி!…..
புதுமைக்குப் பெயர்தான் எஸ்பொ
புரட்சிக்குப் பெயர்தான் எஸ்பொ
புயலுக்குப் பெயர்தான் எஸ்பொ
புத்தூக்கம் அளிப்பார் எஸ்பொ
கவிதையைத் தொட்டார் எஸ்பொ
கதையிலே கால்பதித்தார் எஸ்பொ
விமர்சனம் தந்தார் எஸ்பொ
வில்லங்கம் ஆனார் எஸ்பொ
ஆளுமை மிக்கார் எஸ்பொ
ஆங்கிலம் வல்லார் எஸ்பொ
அனைவரும் வியக்கும் வண்ணம்
அளவிலா படைத்தார் எஸ்பொ
வரலாற்றில் நின்றார் எஸ்பொ
வற்றாமல் கொடுத்தார் எஸ்பொ
துணிவுடன் தமிழை ஆண்ட
தனியொரு துணிவே எஸ்பொ
சொற்களைச் செதுக்கி நின்றார்
சுவையுடன் பேசி நின்றார்
சுந்தரத் தமிழைப் போற்றி
சுழன்றிட்டார் எஸ்பொ சித்தர்
![]()