கதைகள்

அடிப்படை அறிவு…?…. ( குறும்கதை ) … சங்கர சுப்பிரமணியன்.

இருவர் பேசிக்கொண்டு இருந்தனர். அதில் ஒருவர் சாதியைப்பற்றி பேசினார். அப்படி பேசியவர் நாய்களுக்குள்ளும் சாதி இருக்கிறது என்று ஒருவர் தொலைக்காட்சியில் பேசியதாக சொன்னார் என்றார். உடனே மற்றவர்,

“என்னங்க சொல்றீங்க” என்றார்.

“ஆமாங்க. வேட்டையாடுவதற்கு ஒரு நாய், வீட்டுக்காவலுக்கு ஒரு நாய், செல்லப் பிராணியாக வளர்க்க ஒரு நாய், தெருவில் சுற்றும் நாய் என பல சாதிகள் இருப்பதாக அவர் சொல்கிறார்”என்றார்.

அதற்கு மற்றவர், “அது சரி, அவர் படித்தவர்தானா? அவருக்கு ஏற்றவாறு நாயைச் சொல்லும் அவரால் ஆடு, மாடு, பூனை மற்றும் முயலுக்கெல்லாம் சொல்லமுடியுமா? பிராணிகளையும் மனிதர்களையும் ஒப்பிடலாமா என்ற
அடிப்படை அறிவுகூட இல்லாதவரா அவர்?” என்று கேட்டதும் அந்த ஒருவர் பதில்சொல்ல முடியாமல் திருதிருவென்று முழித்தார்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *