கவிதைகள்

மார்தட்ட முடியுமா?…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

எழுத்தாளரெலாம் இங்கே படைப்பாளி
படைப்பதனால் ஆகிறான் படைப்பாளி
ஆணும் பெண்ணும் கூடி இருப்பதுபோல்
கற்பனையோடிங்கு கருத்தும் கூடிடவே

கருப்பையில் கருவும் உருவாவதுபோல்
படைப்பாளி மனதிலேகரு உருவாகிறது
சிசுவும் சிறிதுசிறிதாய் வளர்தல்போலே
சிறிது சிறிதாய் படைப்பும் வளர்கின்றது

குழந்தையை மடியில்சுமக்கும் தாய்போல்
மனதிலே சுமக்கிறார் படைப்பாளிகளும்
தாய் மகவை பிரசவிக்கிறாள் பேரின்பமாய்
படைப்பாளியும் படைத்து இன்புறுகிறான்

மகவைப்பார்த்து மகிழும் தாயைப்போல             
தன் படைப்பைக் கண்டவன் மகிழ்கிறான்
பெற்றபிள்ளை முகம்காண வலி மறப்பாள்
படைத்தவன் சிரமம் படைப்பில் மறையும்

வாடகைத் தாயாக படைப்பாளியும் உண்டு
அவருரிமை படைப்பை படைப்பதோடு சரி
அவர் படைப்பும் பாராட்டு பெற்று நின்றால்
மார்தட்ட முடியுமா தன் படைப்பென்றதை!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *