கவிதைகள்
ஆனந்தம் காண்பார் வாழ்வில்!….. ( கவிதை )…. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கந்தசஷ்டி சிறப்புத் துதி!…..
பசியுடன் நோன்பு நோற்றால்
பக்குவம் காத்து நின்றால்
மோகமாம் எண்ணம் யாவும்
முழுவதும் மறந்து நின்றால்
வேலவன் பாதம் தன்னை
நாளுமே பற்றி நின்றால்
கோளெலாம் அகன்றே போகும்
குமரனும் அருளி நிற்பான் !
கந்தனை நினைப்பார் வாழ்வில் 

வந்திடு வினைக ளெல்லாம்
வெந்துமே சாம்ப லாகும்
வேதனை அகன்றே போகும்
சந்ததம் கந்தன் நாமம்
சாற்றியே நிற்பா ரெல்லாம்
அந்தமில் சுகமும் பெற்று
ஆனந்தம் காண்பார் வாழ்வில் !
![]()