கதைகள்
கொலு!…. ( குட்டிக்கதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

பங்கஜம் மாமி வீட்டில் கொலு வைத்திருந்தார்கள். அதற்கு அக்கம் பக்கத்து வீட்டினரை அழைக்க ரத்னா மாமியும் மகள் அம்புஜத்துடன் போயிருந்தாள். அங்கே கொலுவைப் பார்த்த ரத்னா,
“பங்கஜம், என்னடி கொலுவுல ஒரே மிருகங்களும் பறவைகளுமா இருக்கு?” என்று கேட்டாள்.
அதற்கு அம்புஜம்,
“என்னம்மா இப்படி கேட்டுப்புட்ட பங்கஜம் மாமி வீட்டுக்காரர் மிருக்காட்சி சாலையில சூபர்வைசரா இருக்காரில்லையா அதனால்தான் இப்படி” என்றதும்
அங்கிருந்தவர்கள் எல்லோரும் சிரிக்க கொலு கலைகட்டியது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()