கவிதைகள்

சிற்றுயிர்களின்றிக் காடில்லை!….. ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

தடாகமென்றால் தவளை கத்திடும்
தாவித்தாவி அங்குமிங்கும் ஒடிடும்
தடாகத்தில் தவளையை காண்பரோ
தடாகத் தாமரை கண்டு களிப்பாரோ

பாயும் புலியும் புல்லைத் தின்னாது
புல்லை என்றும் மேயவும் செய்யாது
மேய்ந்தால் புலி என்று சொல்லார்
வேட்டையில் வலுவில்லை என்பார்

முட்கள் அதிகமே முள்ளம்பன்றிக்கு
தொட்டால் குத்தும் அது தவறில்லை
முட்களே அதற்கு இல்லை என்றால்
அதை யார் கவனத்திலே கொள்வார்

சிங்கத்தின் கம்பீரம் அதன் சீற்றமே               
சிறுநரி போல் அதுவும் ஊளையிடுமா
வேட்டைக்கு செல்லும் எந்த வீரரும்
வேங்கையை குறியாயிருந்து தேடுவர்

அவர் காலடி ஓடிடும் சிறுமுயல்களை
ஒருக்காலும் கவனத்தில் கொண்டிலர்
காடென்றால் பல உயிர் வாழ்ந்திடும்
அவை இன்றி காடென்றால் காடல்ல!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *