கவிதைகள்

கண்முன்னே நீயும் ஆடுகிறாய்!… ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

மலரே மலரே நீ ஆடுகிறாய்
என் கண்முன்னே நீ ஆடுகிறாய்
காற்றினிலே கிளைகள் ஆடிடவே
அதன் வேகத்திற்கேற்ப நீ ஆடுகிறாய்
நீ ஆடிடும்போது இதழ்களுமே
இணைந்தாடல் இன்பமன்றோ

உன்னைத் தொட்டு தடவிட ஆசை
உன்னை பறித்து முகர்ந்திட ஆசை
ஆனால் வேலியும் தடுக்கிறதே
மலரே நீ வேலிக்கு அப்புறம் நிற்பதாலே
மனதில் பட்டதை செய்திட முடியாதே

கிளைகள் வேலி தாண்டி வந்தால்                                   
பறித்து முகர்வேன் நிச்சயமாய்
கிளைகள் வேலியைத் தாண்டிடுமோ
என்கைகளும் உன்னைத் தீண்டிடுமோ
நேற்றோ நீ நன்றாய் மலர்ந்திருந்தாய்
இன்னும் சில நாட்கள் மலர்ந்திருப்பாய்

அடுத்த சில நாட்களில் உலர்ந்திடுவாய்
அப்புறமாக மண்ணில் உதிர்ந்திடுவாய்
உதிர்ந்திடும் நிலை நிச்சயமென்றாலும்
மலரே நீ எனைப் பார்த்து ஆடுகிறாய்
என்கண் முன் நீ நன்றாய் ஆடுகிறாய்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *