தலை பத்திரம்!…. ( குட்டிக்கதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

ஒரு தமிழ்ச்சங்கம் அதன் விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட எண்ணி அதில் என்னென்ன நிகழ்ச்சி பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில்
செயலாளர் பட்டிமன்றம் ஒன்றை வைக்கலாம் என்றார்.உடனே தலவர் என்ன தலைப்பு என்ற கேட்க,
“விஜய் சேதுபதி 800 படத்தில் நடித்திருந்தால் நல்லதா அல்லது கெட்டதா?” என்று சொன்னார் செயலாளர்.
“ஐயா, என் உடம்புல தலை இருப்பது உங்களுக்க பிடிக்கலையா? என்று கேட்டார் தலவர்.
“என்னையா சொல்றீங்க?”
என்னையா சொல்றீங்களா. ஐயா, இப்ப ஒவ்வொருத்தரும் கொலைவெறியில இருக்காங்க. பட்டிமன்ற தலைவர் எப்படி தீர்ப்பு சொன்னாலும் இந்த பட்டிமன்றத்தை எப்படி நடத்தலாம்? யார் தலைவருன்னு தேடிவந்து வெட்டுவாங்க. நம்ம தமிழரிடம் உள்ள சிறப்பே இவர்கள் எந்த நேரத்தில் எப்படி இருப்பார்கள் என்று எந்த கொம்பனாலும் யூகிக்கவே முடியாது. அதனால பட்டிமன்றத்தை மூட்டைகட்டி வைப்போம் என்றார் தலைவர்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()