கவிதைகள்
பண்புடை மனிதரே பழியுரையாதீர்!…. ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

நியாயத்தை சொல்லும் நீதிமானே
நீதி எங்கு ஒளிந்துள்ளது பார்த்தீரா
யாருக்கு கோபமில்லை வருத்தமில்லை
நாம் பெற்ற பிள்ளைகளிலே ஒன்றை
ஒன்றடிக்கும் இனிப்பை பிடுங்கியதால்
ஒன்றை மற்றொன்று இன்று அடிக்கும்
நாளை மற்றொன்றை இன்றடித்ததை
திருப்பி அடிக்கும் என்பதறியா
பெற்றோரும் உண்டோ பூவுலகில்
இச்சிறு நீதியறியா சீர்திருத்தவாதியரும்
ஒரு பிள்ளையை மட்டும் அடிப்பாரோ
இன்றடிப்பார் நாளை சேர்வார்
நாநிலத்தே தொன்றுதொட்டு வருவதுண்டு
பிள்ளைகளுக்கிடை பிணக்கை நீக்கி
பேதமை களைவோரே நல்ல பெற்றோர்
வெட்டியே துண்டிட்டு வீண் பழிசுமத்தி
பிள்ளைகளை பிரித்திடும் சூழ்ச்சி செயின்
ஊரறியும் இவ்வுலகமுமறியும் என்றும்
நல்நெறி நிற்றலே நல்வாழ்வு தருமென்றே
பாண்டியன் பரல் அறியாது செய்ததுபோல்
பண்புடை மனிதரே அப்பழி உரையாதீர்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()