கதைகள்

கிரகப்போர்!…. 25…. ( நாவல் ) …… காசியரின் பேரன்.

வைரிக் கிரகத்தினால் செயற்கையாக உருவாக்கப்பட்ட முட்டை வடிவிலானகிரகம் இன்னொரு இயற்கையான கிரகமாகவே தோன்றியது.ஆனால் அதன் வெளிபபுறச்; சுவர்கள் ஏதோ ஒரு உலோகத்தினால் மிகச் சிறிய சிறிய துண்டுகளினால் கட்டப்பட்டிருந்தன.

சாமியும் சுந்தரியம் பூமியில் இருந்த போது அங்குள்ள இரும்பு,பித்தளை, செம்பு, வெள்ளி, அலுமினியம்,தங்கம்,துந்தநாகம் போன்றவற்றையே பார்த்தும் அறிந்திருக்கிறார்கள்.ஆனால் இச்செயறகைக் கிரகத்தின் வெளிப்பறச் சுவர் மஞ்சளும் வெளிநீலநிறத்திலும் இருந்தது.

வைரிக் கிரகத்திற்கு மேலே ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர்கள் வித்தியாசத்தில் வைரிக் கிரகத்திலிருந்து பார்க்கக்கூடிய வித்தியாசத்தில் அந்தச் செயற்கை கிரகம் மிதந்து கொண்டிருந்தது.

பிரபஞ்சத்தில் மிதக்கும் கிரகங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று கவர்ந்து இழுப்பதால் ஏற்படும் காந்தப் புலத்தினாலேயே மிதக்கின்றன.

ஆனால் பிரபஞ்சத்தில் கோள வடிவில்லாத கிரகங்களும் உண்டு இவையும் மிதந்து கொண்டுதான் இருக்கின்றன.அவை தட்டையாகவும் ஒழுங்கற்ற வடிவிலும் இருக்கின்றன.

அவற்றில்கூட உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு.பூமியைத் தவிர்ந்து மற்றைய கிரகங்களில் உள்ள உயிரினங்களின்; தோற்றம் ஏலியன்ஸ் என்ற உயிரினத்தை முன்னிறுத்தி பூமியில் உள்ள விஞ்ஞானிகள் அவ்வப்போது கூறினாலும், அறுதியிட்டுக் கூறமுடியாத நிலை விஞ்ஞானிகளுக்கும் உண்டு.

இரவோடு இரவாக பூமியில் வாழ்ந்த இனங்கள் சில மாயமாக மறைந்திருக்கின்றன என்ற செய்திகளும், அவர்களை வேற்றுக்கிரக வாசிகளே அழைத்துச் சென்றிருக்கலாம் என்ற ஊகங்களும் இருக்கின்றன.இது தொடர்பாக தமிழர்களின் சித்தர்கள,; யோகிகள்,ஞானிகள் எனப்படுவோர் பூமி வாசிகளுக்கும் வேற்றுலக வாசிகளுக்குமிடையில் தொடர்பு இருந்ததாக கூறியுள்ளனர். பிரபஞ்சம் கிரகங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் மேல் நாட்டு விஞ்ஞானிகளும் பூமி மாந்தர்களுக்கும் வேற்றுக்கிரக வாசிகளுக்குமிடையில் தொடர்பு உண்டென்பதை அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

இன்னும் ஒருபடி மேலே போய் வேறு;றக்கிரக வாசிகள் பூமி மனிதர்களுடன் கலந்து உடல் சார்ந்த உறவு கொணடு வாழ்கிறார்கள் என்பதை மறுக்க முடியாமலும் இருக்கின்றது.வேற்றுக்கிரக பூமி மாந்தர்கள் என உடலால் இணைந்து கலப்பினமாகி அவர்களின் பரம்பரை பூமியில் உண்டென்பதும் மறுக்க முடியாத உண்மை.

பூமியிலுள்ள மனிதர்களின் வாழ்விடங்கள் அனைத்தையும் இதுவரையில் முற்றுமுழுதாக எவருமே அறிந்து கொள்ள முடியவில்லை.ஆய்வாளர்களும் தொல்பொருளியலாளர்களும் மனிதர்களின் நடமாட்டம் உள்ள பகுதிகள் பலவற்றை இதுவரையில் இன்னமும் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்தப் பூமியில் கோடிக்கணக்கான தீவுகளிருக்கின்றன.மனிதவாழ்விற்கு பொருத்தமற்ற தீவுகள் என்றும், தேடுவாரற்ற தீவுகள் என்றும் பல கோடித் தீவுகள் இருக்கவே செய்கின்றன.

இத்தீவுகளில் மனிதர்களின் பார்வைக்குட்படாத மனிதர்கள் வாழ்வதற்குரிய சாத்தியக கூறுகளுமிருக்கின்றன.

இவர்கள் மனிதர்களைப் போன்று உருவமுடையவர்களாக ஏன் இருக்க முடியாது என்பதற்கொப்ப பலவாயிரம் வருடங்களுக்கு முன்பாக கலந்துறுவாடி உடல் ரீதியாகக்கூட உறவுகள் ஏற்பட்டதால் பூமிக்குரிய மனித உயிரினமாக நீட்சியடைந்திருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட மனித குழுமத்தின் வாழ்விடத்திற்கு அவர்கள் வந்து அங்கே வாழத் தொடங்கும் போது,பூமி மனிதர்களால் அந்நியர்களாக நோக்கப்பட்டு பின்னர் காலப் போக்கில் அவர்கள் ஒருவரோடு ஒருவர் உறவாடி இருக்கலாம்.

பலவாயிரம் வருடங்களுக்கு முந்திய எகிப்திய மக்களின் உருவ அமைப்பும் அவர்களின் தலையும் வேற்றுக்கிரக வாசிகளின் தலையோடு ஒத்து இருப்பதாக சொல்லப்படுகையில், வேற்றுக்கிரக வாசிகள் பூமி மனிதர்களுடன் உடல் உறவு வைத்திருக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை நிராகரிக்க முடியாது.

டார்வினின் அமீபாவிலிருந்து ஆரம்பித்த உயிரியல் நீட்சியாகிய மானிடக் கொள்கையை நிராகரித்து, வேற்றுக்கிரகங்களிலிருந்தே மனித உயிரினம் கொண்டுவரப்பட்டது என்ற அறிவியல் சான்றுகளை நோக்கியும் ஆய்வுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இவற்றை உண்மையாக்கும் விதத்திலேயே பூமியிலிருந்து சாமியும் சுந்தரியும் கடத்தப்பட்டிருக்கின்றனர்.கடந்தப்பட்ட அவர்கள் பிரபஞ்சத்தில் பயணிக்கும் போதோ அல்லது வேற்றுக்கிரகங்களிலிருக்கும் போதோ அவர்களுக்கு பயவுணர்ச்சி ஏற்பட்டுவிடக்கூடாது எனபதற்காக அவர்களின் மூளைக்கலங்களிலிருந்து பயவுணர்ச்சியைக் கொடுக்கும் வேதியல் மூலக்கூறுகளின் செயல,; எதிர்ச்செயல,; இணைச்செயல் பதார்த்தங்கள் அகற்றப்பட்டிருந்தன.

அந்த அகற்றலும்,பூமிக்கு வந்து அவர்களை அழைத்தச் சென்ற ஆணினதும் பெண்ணினதும் கைகளால் அவர்களைத் தொட்டதும் அவர்களிடமிருந்து சாமி

சுந்தரி ஆகிய இருவரின் நரம்பு வழியாக முளைக்கலங்களில் மாற்றம் செய்யப்பட்டது.

இதனால் அவர்களிருவரும் இதுவரை பயணித்த கிரகங்களிருக்கும் மனித தோற்றமுடையவர்களுடனோ அல்லது யானை முகத்தோடும்,நண்டு முகத்தோடும் இருந்த கிரக வாசிகளைப் பார்த்தும்கூட அவர்கள் இயல்பாகவே இருந்தார்கள்.

அவர்களிருவரிடத்திலும் மற்றவர்களோடு பழகுவதில் அந்நியோநியத் தன்மை இருந்தது.இது அவர்களுக்கு ஒரு கனவு நிலை போலத் தோன்றினாலும் அதையும் மீறி அவர்கள் தாங்களிருவரும் வேற்றுக்கிரகமான வைரிக் கிரகத்தினால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பிரமாண்டம் என்று சொல்வதற்கப்பால் உள்ள பிரமாண்டமான முட்டை வடிவிலான செயற்கைக் கிரகத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பிலும் வியப்பானதே.

இச்செயற்கை கிரகம் தேவையேற்படின் நிலையாக மிதப்பதும்,பிரபஞ்சத்தில் மிதக்கும் இயற்கையான கிரகங்களை அண்மித்து நோட்டம் விடுவதற்காக நகர்ந்து கொண்டுமிருந்தது.

இந்தப் பிரமாண்டமான செயற்கைக் கிரகத்தின் உள்பகுதிகள் யாவுமே பூமி உற்பட அவர்கள் இதுவரை பயணித்து அவதானித்த தரைத்தோற்றம்,மரம் செடி கொடிகள்,பறவைகள் என இருப்பது போலவே அங்கும் இருந்தன.

இயற்கையான தரை இருந்தது, மலைகள் இருந்தன,ஆறுகள் குளங்கள்;, கடலகள்,வீடுகள் மரம் செடிகள்,வீடுகள் முட்டை வடிவிலான பெரிய கட்டிடங்கள்,வீதிகள் என எல்லாமேயிருந்தன.

வைரிக்கிரகத்திலிருந்த வளைய விமானங்கள் போல சிறிய பெரிய அளவுகளில் அவையும் இருந்தன.

இயற்கையான கிரகங்களின் மேற்புறத்திலேயே மேற்கூறிய அனைத்தும் இருக்கும்.அக்கிரகங்கள் தன்னைத்தானே சுற்றும் போது அவை சுற்றிக் கொண்டிருப்பதை உணரவே முடியாது.

கிரகங்களின் ஈர்ப்புச் சக்தி ஒருபுறமும், பவன அழுத்தம் இன்னொரு புறமுமாக பூமியின் மேற்புறத்தில் உள்ள அனைத்துமே சிதறவோ விழுதலோ இல்லாமல் இருந்தன.

இரவு பகல் என இயற்கையின் விதிக்கமைய ஒரு மனிதன் பகலில் பூமி தன்னைத்தானே சுற்றுகையில் நேரே நிற்பதாக வைத்துக் கொண்டால் இரவு நேரத்தில் தன்னைத்தானே சுற்றும் விதிப்படி அவன் தலைகீழாகவே நிற்க வேண்டும்.ஆனால் அவன் எப்பொழுதுதே நேராக நிற்பது போலவே உணர்வதற்கு ஈர்ப்பு விசையே காரணமாகின்றது.பூமி உற்பட கிரகங்கள் வேகமாகச் சுற்றினாலும் அந்த வேகத்தை உணராத வகையில் பிரபஞ்சு விதியாகிய மற்றைய கிரகங்களின் ஈர்ப்பு விசை காரணமாகின்றது.

இயற்கையான கிரகங்கள் போல வைரிக் கிரகத்தின் இச்செயற்கைக் கிரகமும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருந்தது.

அது சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை, அக்கிரகத்தில் உள்ள ஆய்வுகூடக் கருவியால் மட்டுமே உணர வைக்க முடியும்.

அவர்களிருவரையும், அவர்களுடன் வந்த விஞ்ஞானிகளான இரு பெண்களும் ஒரு வீட்டில் ஒப்படைத்திருநத்தால், அந்த வீட்டில் இவர்களுக்காக காத்திருந்த ஆண் வீட்:டைச் சுற்றிக் காண்பித்துவிட்டு, சமையலறைக்குள் அழைத்துச் சென்றார். அந்த வீட்டின் கட்டிட முறை அவர்களை ஆச்சரியப்படுத்தியது. சுமையலறைக்குள் நீலநிறத்தில் நீலநிறத்தில் பாத்திரங்களிருந்தன.

அந்த வீடும் முட்டை வடிவிலேதானிருந்தது.மூன்றாகப் பிரித்திருந்த அந்த முட்டை வடிவ வீட்டின் சமையலறையில் உணவு தயாரிக்கவென சில பொருட்களிருந்தன.அவை விதம் விதமான காய்கறிகளாவும், கிழங்குகளாகவும் இருந்தன.

அவர்,இன்று நீங்களே உங்களுக்குத் தேவையானதைச் சமைத்துச் சாப்பிடுங்கள்.நீங்கள் அவற்றை உங்களுக்கு விருப்பமான அளவில் வெட்ட வேண்டுமென்று கற்பனை செய்தபடியே,இந்த இடத்தில் கையை வைத்துவிட்டு பின்னர் கையை எடுத்து நீங்கள் சமைக்கவிருக்கும் காய்கறி கிழங்குகளுக்கு மேலாக பிடித்தால் நீங்கள் விரும்பும் அளவுக்கு காய்கறிகள் இச்செயற்கைக் கிரகத்தினால் உற்பத்திச் செயப்படும் கதிர்களால் வெட்டப்படும் என்றார்.

தொடர்ந்து அவர் உங்கள் கற்பனையை மூளைக்கலங்கள் உள்வாங்கி, அவற்றை தோற்றமாக்கி இந்தத் தட்டையான பகுதியில் கைவைத்தவுடன் அனுப்புகின்றன.உங்கள் உள்ளங்கையில் அக்கதிர்கள் நிலைகொள்ள நீங்கள் வெட்டப் போகும் பொருளின் மேலே உங்கள் கையை உயர்த்திப் பிடிக்க நீங்கள் கற்பனை செய்த அளவுகளில் காந்த அலைகள் அவற்றை வெட்டும் என்றார்.

சமையல் செய்யும் முறையில் இன்னும் பல ஆச்சரியங்கள் அவர்களுக்கு காத்திருந்தன.

தொடரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *