கதைகள்
தண்டனை!…. ( குட்டிக்கதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

நீதிபதி குற்றவாளியிடம் கடைசியாக வேறு எதுவும் சொல்லவேண்டுமா என்று கேட்க,
“வணக்கமுங்க, நான் கொலைகாரன் அதனால் தூக்குத்தண்டனை நிச்சயம் கிடைக்கும். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?” என்றான்.
“இருக்கு. அதுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?”
இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இருந்தால் சொர்க்கம் மற்றும் நரகத்திலும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும். அதனால் உங்கள் தீர்ப்பின் நகலை நரகத்துக்கும் அனுப்பி வையுங்கள். ஒரு குற்றத்துக்கு இரண்டு
இடங்களில் தண்டனை அனுவிக்க கூடாது அல்லவா என்று கேட்க நீதிபதி தனது தலையைச் சொறிந்தார்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()