கிரகப்போர்!… 24…. ( நாவல் ) -காசியரின் பேரன்.

கொஞ்சத் தூரத்திற்கு அப்பால் இந்த வாகனத்தை நோக்கி மிதந்து வந்து கொண்டிருந்த இன்னொரு விமானம் இவர்களின் விமானக் கதவுக்கு நேரே நிற்க குழாய் போன்ற நடைபாதை அவ்விமானத்திலிருந்து இவர்கள் போன விமானத்தின் கதவோடு வந்து ஒட்டியது போன்று நிற்க அங்கிருந்து இரு பெண்கள் இந்த விமானத்திற்குள் குழாய்நடைபாதை வழியாக வந்து ஏறினார்கள்.
அவர்கள் இருவரையும், சாமி சுநதரியுடன் வந்த அதிகாரிகள் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.அவ்விரு பெண்களுமே விஞ்ஞானிகள்.வளைய விமானம் அனைவரையும் ஏற்றிக் கொண்டு மிக அதிக உயரம் நோக்கி மிதக்கத் தொடங்கியது.உயரத்தில் கோழிமுட்டை வடிவில் கட்டிடம்; ஒன்று மிதந்து கொண்டிருந்தது.
அந்தக் கட்டிடத்தை நோக்கிச செல்லச் செல்ல அக்கட்டிடங்களின் பிரமாண்டம் அவர்களுக்கு வியப்பைத் தந்தது.
பிரபஞ்ச வெளியில் கிரகங்கள் மிதந்து கொண்டிருப்பதே நினைக்குந்தோறும் பிரமிப்பாகவே இருக்கும்.
அதைப் போலவே வைரிக் கிரகத்தினால் உருவாக்கப்பட்ட செயற்கையான கிரகம் வானில் மிதந்து கொண்டிருப்பதும் சாமியையும் சுந்தரியையும் பிரமிக்க வைத்தன.ஆனால் அப்பிரமாண்ட கட்டிடம் அவர்களுக்கு பயத்தின ஏற்படுத்தவில்லை.
அந்தக் கட்டிடத்தின் முன்னால் வளைய விமானம் நின்றதும் அனைவரும் தொடுப்புக் குழாய் போன்ற வழிக்கூடாக அந்தப் பிரமாண்ட கட்டிடத்துக்குள் நுழைந்தனர்.
தூரத்திலிருந்து பார்த்த போது அந்த பிரமாண்ட கட்டிடம்;; ஓரளவு பெரிதாக தெரிந்தாலும் அருகில் சென்றவுடன் அக்கட்டிடத்தின் பிரமாண்டம் வியப்பைத் தந்தது.
முட்டை வடிவிலான அக்கட்டிடம் வெட்ட வெளியில் மிதந்து கொண்டிருப்பது இன்னொரு கிரகம் மிதந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது.
இரு பெண் விஞ்ஞானிகள் உட்பட சாமி சுந்தரி என நால்வரும் அக்கட்டிடத்தின் வாசலில் போய் நின்றதும் அவர்களின் உடலைச் சுற்றி ஒரு வலையமைப்பைப் போன்ற ஒளிக்கீற்றுக்கள் பாயத் தொடங்கின.அதற்குப் பிறகு அங்கு தானாக இயங்கி வந்த நான்கு இயந்திரங்கள் அவர்கள் நால்வருக்கும் அவரவர் உடல் அளவுகளுக்கு ஏற்ப உடைகளை அவர்களின் உடல்களின் பின்னின.
ஓவ்வொருவரின் உடலின் அளவுக்கு ஏற்ப உடைகளை பின்னி அணிவித்தபின் இயந்திரங்கள் அந்த இடத்தை விட்டு அகன்று சென்றன.உடையுடனேயே அவர்கள் நால்வருக்கும் முகமூடிகள் போன்றதையும் அந்த இயந்திரங்கள் பின்னியிருந்தன.
நடந்து கொண்டே பெண் விஞ்ஞானிகளில் ஒருத்தி , இந்த விஞ்ஞான கூடத்துக்கு வருவோர் இப்படித்தான் பாதுகாப்:பு உடைகளை அணிய வேண்டும். ஏனென்றால் இங்கு அபாயகரமான கதிர்வீச்சுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.அவை சில வேளைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் , முன்னெச்சரிக்கையாக இப்பாதுகாப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது என்றவள் , சுந்தரி நீங்கள் கர்ப்பமாக இருப்பதால் இன்னும் அதிகம் நாங்கள் கவனமெடுப்போம் என்றாள்.
அந்த முட்டை வடிவக் கட்டிடத்தை வெளியில் இருந்து பார்த்த போது கண்ட பிரமாண்டத்தைவிட உள்ளே அக்கட்டிடம் வியப்புத்தருமளவிற்கு இன்னும் அதிகளவு பிரமாண்டமாக இருந்தது.
வைரிக் கிரகத்திற்கு வெளியே இன்னொரு கிரகம் போன்ற தோற்றத்தில் நிலையாக அந்தரத்தில் எப்படி அந்தக் கட்டிடம் நிற்கின்றது என்பதை விளக்குவதற்காக ஒரு பெரிய மண்டபத்திற்கு இருவரையம் அழைத்துச் சென்றனர்.
மண்டபத்தில் இன்னும் பலர் இருந்தனர்.அவர்கள் அனைவரும் அங்கு வசிப்பவர்கள்.ஒரு பெரிய திரையில் அந்த முட்டை வடிவக் கட்டிடம் தென்பட அக்கட்டிடம் மிதப்பதற்கான அறிவியலை அந்த மண்டபத்தில் இருந்த விஞ்ஞானி விளக்கத் தொடங்கினார்.
பிரபஞ்சம் எங்கும் எண்ணிறந்த கிரகங்கள் மிதக்கின்றன.இக்கிரகங்களிலிருந்து மிகப் பாரியளவிலான கதிர் வீச்சுக்கள் இடம்பெறுகின்றன. ஆந்தக் கதிர் வீச்சக்களை பெரும் சக்தியாக மாற்றி இக்கட்டிடத்தை மிதக்க வைத்துள்ளோம்.
இக்கட்டிடத்தின் வெளிப்புறம் கதிர்வீச்சுக்களை உறிஞ்சி பெரும் சக்தியாக மாற்றுகின்றது.மேலிருந்து கீழாகவும் , கீழிருந்து மேலாகவும் எல்லாப் பக்கங்களிலுமிருந்து கதிர்வீச்சுக்கள் இடம்பெறுவதால் வைரிக் கிரக விஞ்ஞானிகள் தமது விஞ்ஞான அறிவால் இக்கட்டிடத்தை மிதக்க வைத்துள்ளார்கள் என்று சொன்னவர் இந்த விஞ்ஞான கூடம் ஒரே இடத்தில் நிற்பது போல உங்களுக்குத் தோன்றினாலும் அது நகர்ந்து கொண்டேதானிருக்கிறது.
இதுவரையில் பலகோடி மைல்களைக் கடந்துள்ள இந்த விஞ்ஞான கூடம் எமது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கிரகங்களையும் கண்காணித்து வருகின்றது.நீங்கள் வாழ்ந்த பூமிக்கு மேலாக பலமுறை வந்து போயிருக்கிறது.
பூமியில் உள்ளவர்கள் காற்றற்றஒ வெற்றிடத்தில் நிறுத்தி வைத்துள்ள அவர்களின் ஆய்வு கூடத்தை பலமுறை அருகிலிருந்து கண்காணித்திருக்கிறோம்.
நீங்கள் இங்கு வருவதற்கு முன்னர் பூமியிலுள்ள மனிதர்களால் அனுப்பப்பட்ட சட்லைட்டுகளை மாங்கதிர் விஞ்ஞானிகள் அடித்து நொருக்குவதற்கு நாங்களே உதவி செய்தோம் என்று சொன்னவர் இன்னும் நிறையவே உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய விடயங்கள் இருக்கின்றன முதலில் இந்த விஞ்ஞான கூடத்தில் என்னென்ன நடக்கின்றன என்பதைச் சுற்றிக் காண்பிக்கிறோம் சொல்லிக் கொண்டே சாமியையும் சுந்தரியையும் மண்டபத்தை விட்டு வெளியே அழைத்து வந்தனர்.
வளைய விமானத்திலிருந்து நேரடியாக இம்மண்டபத்திற்குள் அவர்களிருவரையம் அழைத்துச் சென்றபடியால் அங்குள்ளவற்றை அவர்களால் முழுமையாக அவதானிக்க முடியவில்லை.
மண்டபத்தைவிட்டு வெளியே வந்தவர்கள் அங்கே பல கிலோமீற்றருக்கு வீதிகளிருப்பதையும் , அந்த வீதிகள் யாவும் குறுக்கும் நெடுக்குமாக வளைந்து செல்வதையும் , பலவிதமான மரங்கள் இருப்பதையும் வீதியோரங்களில் வீடுகளிருப்பதையும் கண்டு இது கிரகங்களின் மேற்பரப்பு போலவிருக்கின்றதே என வியந்தனர்.
வைரிக் கிரகத்தில் பார்த்த பறவைகள் அங்கும் பறந்து கொண்டிருந்தன. பூமியிலிருந்த போது சாமியிடமோ சுந்தரியிடமோ ஒரு கைத் தொலைபேசிகூட இருந்ததில்லை.ஆனால் அவர்களைப் பூமியிலிருந்து அழைத்து வந்து பலவாயிரம் கோடி மைல்களுக்கப்பால் உள்ள கிரகங்களில் அதுவும் பூமியை விட பலமடங்கு விஞ்ஞான அறிவுள்ள மனிதர்களுடன் வாழ்வதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் அவர்களிடம் இருந்த ஒரு கேள்விக்கு விடை காண முடியாமல் இருந்தனர்.
அவர்கள் பிரமிப்புடனும் யோசனையுடனும் இருந்த போது அங்கும் சிறிய வளைய வாகனம் வந்து நிற்க அதில் அவர்களை ஏற்றிக் கொண்டு பெண் விஞ்ஞானிகள் புறப்பட்டனர்.
மாங்கதிர் , அங்கனக்கா, நண்டுங்கா, பச்சைக் கிரகம் ஆகியவற்றில் கேட்க வேண்டுமென்று நினைத்த சந்தேகத்தை விஞ்ஞானிகளிடம் கேட்டுவிடுவது எனத் தீ ர்மானித்த சுந்தரி வாயைத்: திறக்கும் முன்பே „பூமியைவிட்டு வந்ததிலிருந்து நீங்களிருவரும் ஒரு விளக்கத்தைக் கேட்க வேண்டுமென்று நினைத்து அதை எங்களிடம் வேற்றக்கிரகத்திலிருந்து பூமிக்கு வந்து போவதாக அங்குள்ள விஞ்ஞானிகள் சொல்லிக் கொள்வது ஏலியன்ஸ் என்ற உயிரினத்தை, ஆனால் மாங்கதிர் கிரகம் பச்சைக் கிரகம் வைரிக் கிரகத்திலிருப்பவர்கள் எங்களைப் போலவேயிருக்கிறார்களே என்பதுதானே „ என்றவுடன் ,அவர்களிருவரும் மௌனமாக , பூமி விஞ்ஞானிகள் முழு மனித குலத்தையுமே
ஏமாற்றுகிறார்கள், அது மட்டுமல்ல பூமியில் நாடுகளின் அடவாடித்தனங்கள் கூடிக் கொண்டே வருகின்றன.
வேண்டுமென்றே போர்களையும் பஞ்சம் பசியையும் மக்களுக்கு நாடுகள் ஏற்படுத்துகின்றன.அவர்களை அழிப்பதற்கே அப்பாவிகளான உங்களிருவரையும் தேர்ந்தெடுத்து அழைத்து வந்தோம்.
உங்கள் ஆண்டுக் கணக்கின்படி பலவாண்டுகளாக பலரைக் கண்காணித்து அதிலிருந்து உங்களைத் தேர்வு செய்தோம்.வைரிக் கிரக நாட் கணக்கின்படி நீங்களிருவரும் சில நாட்களுக்கு இந்த விஞ்ஞான கூடத்திலிருப்பீர்கள்.அந்த நாட்களில் பல கிரகங்களுக்கு போய் வருவீர்கள்.
இங்கிருக்கும் நாட்களில் பல விஞ்ஞானக் கருவிகளைப் பார்ப்பீர்கள் என்று சொல்லியவர்கள் அங்கிருந்த வீடொன்றுக்கு அழைத்தச் சென்று அவர்களிருவரையும் அங்கிருந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.
(தொடரும்)
![]()