கவிதைகள்
பெருமனது தருவாயே பெருமானே!… ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

அனுபல்லவி
கொடிய வினை எனை அகல
குடி முழுதும் விடிவு பெற
அடி தொழுது பரவி விட அருளாயே
அழகு கொழுகு திருமுருகா அருளாயோ ( கொடிய வினை )
பல்லவி
மன முருகி தினமு முனை
தொழு தழுது பாடி விட
அருகி லெனை அமரவிடு குமரேசா
அருகி லெனை அமரவிடு குமரேசா ( கொடிய வினை )
சரணம்
உல கிடையே நாளு முனை
ஒரு பொழுது மற வாத
மன மதனை தருவாயே குமரேசா
அற நினைவு எனை அணைய
கருணை நிறை வத மதனை
தெரிய விடு தேவகுல பெருமானே
போக நிலை போ யகல
தாக மொடு உன தடியை
மேவுநிலை பாராயோ பெருமானே
கோபமது போயகல குண மெலா
மனமேற காதலொடு பாராயோ பெருமானே
கரும வினை களையாயே பெருமானே ( கொடிய வினை )
![]()