கவிதைகள்
அறமதை நினைப்பவன் அமைக்கிறான் நல்வழி!…. ( கவிதை ) … கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

விதைத்தவன் உறங்குவான் விதை உறங்காது
கதைப்பவன் மறையினும் கரு மறையாது
கொதித்தவன் அடங்கினும் கொதி அடங்காது
பறித்தவன் பதுங்கினும் பறி பதுங்காது !
கதைப்பவன் மறையினும் கரு மறையாது
கொதித்தவன் அடங்கினும் கொதி அடங்காது
பறித்தவன் பதுங்கினும் பறி பதுங்காது !
படித்தவன் ஒதுங்குவான் படிப்பு ஒதுங்காது
உழைத்தவன் உழலுவான் உழைப்பு உழலாது
நடிப்பவன் பெருகுகினும் நடிப்புப் பெருகாது
கொடுப்பவன் காட்டிடான் கொடுப்பது காட்டிடும் !
பொறுப்பவன் புகழ்கிலான் பொறுப்பு புகழ்துவிடும்
இறப்பதை உணர்கிலான் இறப்பு உணர்த்திவிடும்
பிறப்பதை காண்கிலான் பிறப்பு காட்டிவிடும்
அடிமையாய் இருப்பவன் அடிமையை அறிந்திடான்
கொடுமைய இழைப்பவன் கொடுமையத் தெரிந்திடான்
கருணையை மறப்பவன் கடவுளை மறக்கிறான்
அறமதை நினைப்பவன் அமைக்கிறான் நல்வழி
![]()