கதைகள்
மன்னிப்பு!… ( குறும் கதை ) … சங்கர சுப்பிரமணியன்.

கொரோனா வராதிருக்க அணியும் கவசத்தை சிலர் பேசும்போது வாய் தெரியும்படி இறக்கிவிட்டு பேசுகிறார்கள்.
அப்படி ஒருவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட ஒருவர்,
“இவங்கள்ளாம் எதுக்கு கவசத்தை அணிகிறார்கள்? பேசினாலும் கூட மூக்கையும் மூடிக்கொண்டுதான் பேசவேண்டும். அதுதான் பாதுகாப்பு” என்றார் அருகிலிருந்தவரிடம்.
அதற்கு அவர், “அட போங்க. நீங்க ஒன்னு. இவர் செய்யுறது தப்புன்னா நம்ம திருப்பதி ஏழுமலையான் நெற்றியோடு நிற்க வேண்டிய நாமத்தை மூக்கு நுனிவரை போட்டு பாதி கண்களையும் மறைத்திருக்கிறாரே? அதை நாம் ஏற்கவில்லையா? ஒருவர் சுதந்திரத்தில்
ஒருவர் தலையிடக்கூடாது” என்றார்.
உடனே மற்றவர், “சரிதாங்க, மன்னிச்சுடுங்க என்றார்” என்றார்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()