கவிதைகள்
இன்பமெங்கே இன்பமெங்கே என்று ஓடு!…. ( கவிதை ) … சங்கர சுப்பிரமணியன்.

கண்ணருகே தோன்றும் பொருள்![]()
பெரிதாகத் தெரிந்து நிற்பதுவும்
வெகுதூரம் உள்ள பொருளதுவே
சிறிதாகத் தெரிவதும் நாமறிவோம்
அப்பொருளில் ஏதும் பேதமில்லை
சிறிதும் பெரிதாய்த் தெரிவதற்கும்
கண்ணில் எதுவும் சிக்கலுண்டோ
காண்பது பிழையாய்த் தெரிகிறது
பொருளும் ஒன்றே கண்ணும் அதுவே
காட்சி மட்டும் வேறாய்த் தெரிவதற்கு
தூரமின்றி வேறெதெவும் இங்கில்லை
துலங்குவதும் பொய்யல்ல மறுப்பதற்கு
துன்பம் வந்தாலும் துயர் நேர்ந்தாலும்
சிறிதென எண்ணிடவே சிறிதாகிடுமே
பெரிதாக எண்ணி வாழ்வில் பயந்தால்
பேரிடி விழுந்ததுபோல் தோன்றிடுமே
வாழ்வில் இன்பம் துன்பம் இரண்டுமே
சேர்ந்து மாறி மாறி வந்து போவதுண்டு
இவையாவும் கடந்துபோம் வாழ்வினிலே
இடுக்கண் வருங்கால் நகுகவென புரியும்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()