கதைகள்
சடங்கு சம்பிரதாயம்!…. ( குறும் கதை) …. கே.எஸ்.சுதாகர்.

“அக்கா…! மகள் பெரிசாயிட்டாள்!” கனடாவிலிருந்த தங்கை சொன்னாள்.
“அதுக்கேன் கவலை?” அவுஸ்திரேலியாவிலிருந்த அக்கா கேட்டாள்.
“அவளுக்கு ஒன்பது வயதுதானே ஆகுது. ஒருத்தருக்கும் சொல்லேல்லை. நீங்கள்தான் வந்து நடத்தித் தர வேணும்.”
அவுஸ்திரேலியாவிலிருந்து பத்தாயிரம் டொலர்கள் செலவழித்து அக்கா குடும்பத்தினர் கனடா சென்றார்கள்.
சடங்கு நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், சகோதரன் ஜேர்மனியில் இறந்து விட்டான்.
கனடாவில் சாமத்தியச் சடங்கும், ஜெர்மனியில் செத்த வீடும் ஒரே நேரத்தில் நடந்தன.
![]()