கட்டுரைகள்

சாமானியனின் சரடு…..சரடு…8…. ( கட்டுரை )…. சங்கர சுப்பிரமணியன்.

அப்படிப்பட்ட கதைகளில் நான் சிறுவயதில்
பாட்டிகளிடம் கேட்ட கதைகள் சிலவற்றை
பற்றி சொல்கிறேன்.  பேயை வயப்படுத்த மலையாள மாந்திரீகரிடம் சென்றால் அவர் பேயை வயப்படுத்துவாரம். சரி, பேயை எப்படி அழைத்துச் செல்வது? ஒருவேளை பேய் பிடித்தவரை அழைத்துச் செல்வதா? அப்படி பேய்பிடித்தவரை அழைத்துச் செல்வதாயிருந்தால் அது உறவோ நட்பாகவோ இருக்கவேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில் பின்வருவன சாத்தியப்படுமா?

வயப்படுத்தியபின் அதைக் கட்டுப்படுத்த கஞ்சிரா மரத்தினால் செய்யப்பட்ட குச்சியை பேயின் உச்சந்தலையில் ஆணி அடிப்பதுபோல் அடித்து விட்டால் பேய் சொன்னபடி கேட்குமாம். அதன் பின் அந்த பேய் வீட்டில் சமையல் வேலை எல்லாம் செய்யுமாம். அடுப்பெரிப்பதற்காக காலை அடுப்பினுள் வைத்து விறகுபோல் எரியவிடுமாம். அப்படியானால் குடும்பத்துக்கு ஒருபேயை வசியம் செய்து வைத்திருந்தால் வீட்டு வேலைகளையும் நாம் செய்ய வேண்டாம். விறகு செலவும் மிச்சம் இல்லையா?

இதெல்லாம் நடக்குமா என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. ஆனால் நான் கதைகேட்ட சமயம் இதுபற்றி கேட்காமல் பயத்துடன் வாய்திறந்தபடி கதை கேட்கத்தான் முடிந்தது. கேள்வி கேட்கத் தோன்றவில்லை. ஆனால் அந்த பேய்கள் எவ்வளவுதான் அடங்கி நடந்தாலும் தப்பித்து போவதிலேயே குறியாய் சந்தர்ப்பத்துக்கு காத்திருக்குமாம். ஏமாந்த நேரமாய் பார்த்து வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாதபோது சிறுவர்கள் யாரையாவது அழைத்து தலையில் பேன் பார்க்க சொல்லுமாம்.

அப்படிப் பேன் பார்க்கும் போது சிறுவர்கள் கண்ணில் தலையில் அடிக்கப்பட்டிருக்கும் காஞ்சிரா மரக்குச்சியைப் பார்க்க அதைப்பற்றி பேயிடம் கேட்கும்போது என்னவென்று தெரியாதது போல் நடித்து அதைப் பிடுங்கி எடுக்கச் சொல்லுமாம். சிறவர்களும் அதைப் பிடுங்கிவிட பேய் பழைய நிலைக்கு வந்து அமைதியாய் இருந்து வீட்டுப் பெரியவர்கள்
யாராவது வந்ததும் அவர்களை அடித்துவிட்டு ஓடிவிடுமாம். பேய் கதைகள் மட்டுமின்றி சாமி கதைகளும் நிறையவே சொல்வார்கள். அதையெல்லாம் கேட்டு வளர்ந்ததாலேயே நமக்கு துன்பம் நேரும்போது பகவான் வந்து காப்பாத்துவார் என்று நம்பிக்கையே வளர்ந்தது.

பகவானும் அப்படி காப்பாற்றிய கதைகளை நிறையவே சொல்வதுண்டு. நாமாவது கடவுளுக்கு அபிசேகம் பண்ணுகிறோம் அர்ச்சணை பண்ணுகிறோம் அதனால் கடவுள் நமக்கு நன்மை அளிக்கிறார். ஆனால் எல்லா உயிர்களுக்கும் பகவான் பாரபட்சம் இன்றி உதவியிருக்கிறார். ஒரு சமயம் யானையின் காலைக்கவ்வி தண்ணீருக்குள் இழுத்த முதலையை தனது சக்கர ஆயுதத்தால் கொன்று யானையை காப்பாற்றினாரம் பகவான். ஆனால் அதே பகவான் முதலைக்கு தீங்கிழைத்து விட்டாரே?

இந்தமாதிரி கதைகளெல்லாம் கேட்டுவந்த நான் எனக்கு விவரம் தெரிந்தவுடன் பாட்டிகளைக் கேட்கலாம் என்றால் பாட்டிகள் யாவரும் பரலோகம் சென்று விட்டார்கள். அப்படியே இருந்தாலும் நடக்காததையா சொல்கிறோம் என்பார்கள். பத்துதலை ராவணன், ஐந்துதலை நாகத்தையெல்லாம் பார்த்திருக்கோமா? அது மாதிரிதான் இது எல்லாம். பெரியவங்க சொன்னா உண்மைன்னு நம்பனும். அது அப்படி இருக்குமா இது இப்படி இருக்குமா என்று விதண்டா விவாதம் பண்ணக்கூடாது என்று சொல்லி நம்மை அடக்கிவிடுவார்கள்.

அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. இராவணன் எவ்வளவு வலிமையானவன், பகவான் அநுமன்
மகாபிரபு அவனையே திணறவைத்து இலங்கையை தீயிட்டு கொளுத்தவில்லையா? ஒரு புடவை அதிகபட்ச நீளம் பதினாறு முழம்தான். ஆனால் துச்சாதணன் இழுத்ததும் பதினாறு முழத்தில் நிற்காமல் வந்துகொண்டே இருந்ததே. நான் சிறுபையனாக இருந்த போது சினிமாவில் பார்த்திருக்கிறேன். துச்சாதணன் இழுத்த புடவை மலைபோல் குவிந்திருக்கும்.

நம் மக்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்பது அப்போது எனக்கு புரிந்தது.

அவ்வளவு நீளமான புடவையை தறிபோட்டு நெய்திருக்கிறார்களே? அப்போது விசைத்தறியும் கிடையாது. அவ்வளவு நீள புடவை இருக்குமா? படம் மூன்றுமணி நேரத்தில் முடியவேண்டும். அப்படி மட்டும் இல்லாவிட்டால் துச்சாதணன் இழுத்த புடைவையின் நீளம் எவ்வளவு இருந்திருக்கும்? இதை எல்லாம் நினைக்கவே கூடாது. அப்புறம் நரகத்தில் போய் முடிவில்லாமல் புடவை நெய்ய வைத்துவிடுவார் பகவான்?

இப்படி எல்லாம் ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருப்பதையும் தண்டனை கிடைப்பதையும் ஒரு சினிமாவில் கூட நாம் பார்த்திருக்கிறோம். அப்போதே நான் நினைந்தேன். நல்லது செய்தால் நல்லது நடக்கும் தீயது செய்தால் தீயது நடக்கும் என்று சொல்லாமல் இப்படி எல்லாம் அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறதே எண்ணுவேன். அப்புறம் சமாதானம் அடந்தேன். எப்படி? அப்போது கல்வி கற்காதவர்கள் ஏராளமாய் இருந்தார்கள். அவர்களை எளிதில் முட்டாளாக்கிவிடலாம். அதைத்தான் செய்திருக்கிறார்கள்.

அப்படாயானால் நம் முன்னோர்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதெல்லாம் பொய்யா? இப்போதுதான் கிட்டத்தட்ட எல்லோரும் படித்திருக்கிறார்களே? அரசியல் சட்டத்தை மாற்றுவதுபோல் காலமாற்றத்திற்கு ஏற்ப அந்த புத்தகத்தில் திருத்தங்களை கொண்டுவரக்கூடாதா? இல்லை அதை எல்லாம் மாற்றக்கூடாது
என்று இந்த கொரோனா காலத்திலும் கூறுபவர்கள் இருக்கிறார்களா? இன்னும் எத்தனை நாள்தான் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தூக்கி போடுவதை அனுமதிப்பது?

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. அதை உணர்ந்த புலித்தோலை அரைக்கசைத்த பெருமானே நாகரிகம் முன்னேறிய பின் நெசவாளர்களால் பட்டால் நெய்யப்பட்ட உடையை உடுத்த ஆரம்பித்து விட்டார். திருக்கல்யாணத்தில் பொற்கொல்லர்களால் செய்யப்பட்ட திருமாங்கல்யத்தையும் மனைவிக்கு கட்டுகிறார். தேரை ஓட்ட இயந்தரங்களை எல்லாம் அனமதிக்கிறார். காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி ஆன்லைனில் தரிசணம் தருகிறார். இதுபோல் மாற்றங்களை
எல்லாவற்றிலும் கொண்டுவர அருள் பாலிப்பார் என்று நம்புவோம்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button