கதைகள்
அதுவும் இதுவும்!…. ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)
அதுவும் இதுவும்!
அம்மா எவ்வளவோ சொல்லியும் வசந்தன் கேட்கவில்லை. தான் விரும்பியபடி ஒரு பெண்ணைக் கூட்டி வந்தான்.
“அம்மா…. நான் இவளைத்தான் திருமணம் செய்யப் போறன்.”
“சரி. செய்!”
நாட்கள் நகர்ந்தன. வசந்தன் வேலையில்லாமல் அலைந்து திரிந்தான்.
இப்போது மூன்று பிள்ளைகள்.
“அம்மா…. என்ரை கடைக்குட்டிக்கு பிறந்தநாள் வருது. பேர்த்டே செய்யக் காசு வேணும்.”
”பிள்ளையைப் பெறுறது நீ, பேர்த்டே செய்யுறது நானா? அதுக்கு நீ, இதுக்கு நானா?” என்றார் அம்மா.
![]()