கதைகள்
அவரவர் அவசரம்!…. ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை
அவரவர் அவசரம்!
ராம் வேலை இழந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. காலையில் நடந்த நேர்முகப்பரீட்சைக்கு மாலைக்குள் முடிவு சொல்வோம் என்றார்கள். பதிலுக்காகக் காத்திருந்தான்.
தொலைபேசி அடித்தது. பதறியபடி எடுத்தான். மறுமுனையில் இலங்கையில் இருக்கும் அண்ணா.
“மகளுக்கு கலியாணம். முடிஞ்சதை அனுப்பு.”
வங்கிக் கணக்கை அண்ணா சொல்லுகையில் ராமின் கைபேசி அடித்தது.
“அண்ணா… லைனிலை இருங்கோ”
கைபேசியில் வேலை கிடைக்கவில்லை என்ற செய்தி. மீண்டும் “அண்ணா…” என்ற போது மறுமுனையில் ரெலிபோன் வைக்கப்படிருந்தது.
நன்றி : வெற்றிமணி
![]()