பழையதும் புதியதும்!… சங்கர சுப்பிரமணியன்.

பழையதும் புதியதும் என்று இங்கு நான் குறிப்பிடுவது ஒரு சில பேரழிவுகளைப் பற்றித்தான். இயற்கையால் ஏற்படும்
அழிவுபற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை ஏனெனில் அது நம் கையிலில்லை. மனிதர்களால் ஏற்பட்ட பேரழிவை பற்றியே நான் சொல்ல வருகிறேன். உலகில் மனிதனால் ஏற்பட்ட சில பேரழிவுகள் மிகவும் நம்மை
பாதிப்படைய செய்கின்றன.
முதலாவது மகாபாரத யுத்தத்தால் ஏற்பட்ட பேரழிவு. இது ஒரு காப்பியமே என்றாலும் பங்காளிகளுக்கு சேரவேண்டிய சொத்தைக் கொடுக்காமல் பதினெட்டு நாட்களாக போர்புரிந்து லட்சக்கணக்கான போர்வீரர்களையும் யானைகளயும் குதிரைகளையும் பலி கொடுத்து கண்ட பலன் என்ன? போர் புரிந்தவர்களில் உயிரோடு இருந்தோர் பன்னிரண்டுபேர்களே! இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ராஜகுமாரா என்று சொல்ல அங்கே துரியோதனனே இல்லை.
அடுத்ததாக ஜெர்மனியில் அடால்ப் ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியின்போது 1942ல் மிகவும் கொடுமையாக நச்சுப்புகை நிரம்பிய அறைக்குள் அடைத்தும் இன்னும் பிற வழிகளிலும் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்களை கொன்று குவித்தனர். அப்படி என்ன இனவிரோதம் அத்தனை மக்களை அவ்வாறு அநியாயமாய்க் கொல்வதற்கு? கடைசியில் தற்கொலை செய்து கொண்டதுதான் மிச்சம்.
உலகெங்கும் உரிமைக்காகவும் இனவிடுதலைக்காகவும் போராடுகிற மக்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்தார்கள். இதற்கு பலநாடுகள் துணைபோனார்கள்.
இருப்பினும் இருபதாம் நூற்றாண்டுக்குப்பின் கிழக்கு டிமொர், மாண்டிநிக்ரொ, கொசொவோ, தெற்கு சூடான் போன்ற நாடுகளே விடுதலையை சுவைக்க முடிந்தது.
இப்படி கொல்லப் பட்டவர்கள் அனைவருமே மனிதர்களாலும் அவர்களது சூழ்ச்சிகளாலும்
கொன்று குவிக்கப்பட்டார்கள். ஆனால் இன்று வேறுவகையில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட தொற்று நோயை ஏற்படுத்தும் நுன்கிருமிகள் இன்று இனம், மதம், மொழி என்ற பேதமின்றி எல்லா நாட்டினரையும் சேர்த்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை காவு வாங்கியுள்ளது.
அன்று உயிர்களை அழிக்க உறுதுணையாய் இருந்தவர்களுக்கெல்லாம் தம் இனம் உயிரிழப்புக்கு
ஆளாகும்போது உயிரின் அருமை தெரிகிறது. இந்த படிப்பினைக்குப் பின்னாலாவது
உலகில் நான் பெரியவன் நீ பெரியவன், என்னால் எதையும் செய்ய முடியும், சிறிய கியூபா போன்ற நாடுகளால் ஒன்றும் செய்யமுடியாது என்று
நினைக்காமல் எல்லோரையும் அழித்துவிடலாம் என்ற இறுமாப்பான நிலைமாற வேண்டும்.
ஒரு சிறு நுன்கிருமியின் பிடியில் சிக்குண்டு செய்வதறியாது விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் நிலை உணரவேண்டும்.
மனிதநேயம் மலரும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()