கவிதைகள்

பெருவரமாய் பெண்ணன்றோ உருவாகி நிற்கின்றாள்!…. கவிஞர். மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கண்னுக்குள் மணியாக 
               மண்ணுக்கு உரமாக
               விண்ணுக்குள் நிலவாக
               விளங்குவள் பெண்ணாவாள் 
               எண்ணத்தில் இரக்கமதை
               இருத்திவைக்கும் இதயமதை 
               மண்ணகத்தில் கொண்டிருக்கும்         
               மாபிறப்பே பெண்ணாவாள்   !         
 
               இறைவனது படைப்பினிலே
               பெண்படைப்பே பெரும்படைப்பு
               தாய்மையெனும் உயர்நிலையை
               தாங்குவது பெண்ணன்றோ 
               பொறுமையெனும் இலக்கணத்தை
               விளக்கிநிற்கும் பெருநூலாய்
               பூமிதனில் பார்ப்பதற்கு 
               பெண்தானே விளங்குகிறாள்  ! 
 
                ஈரமுடை  நெஞ்சத்தை
               இறைகொடுத்தான் பெண்ணுக்கு
               பாரமெலாம் தாங்குகின்ற 
               பக்குவத்தை உவந்தளித்தான் 
               கார்மேகம் பொழிவதுபோல்
               கருணைமழை பொழிந்துநிற்கும் 
               பெருவரமாய் பெண்ணன்றோ
               உருவாகி நிற்கின்றாள்  !
கவிஞர். மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. 
              

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *