கவிதைகள்
பெருவரமாய் பெண்ணன்றோ உருவாகி நிற்கின்றாள்!…. கவிஞர். மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கண்னுக்குள் மணியாக 

மண்ணுக்கு உரமாக
விண்ணுக்குள் நிலவாக
விளங்குவள் பெண்ணாவாள்
எண்ணத்தில் இரக்கமதை
இருத்திவைக்கும் இதயமதை
மண்ணகத்தில் கொண்டிருக்கும்
மாபிறப்பே பெண்ணாவாள் !
இறைவனது படைப்பினிலே
பெண்படைப்பே பெரும்படைப்பு
தாய்மையெனும் உயர்நிலையை
தாங்குவது பெண்ணன்றோ
பொறுமையெனும் இலக்கணத்தை
விளக்கிநிற்கும் பெருநூலாய்
பூமிதனில் பார்ப்பதற்கு
பெண்தானே விளங்குகிறாள் !
இறைகொடுத்தான் பெண்ணுக்கு
பாரமெலாம் தாங்குகின்ற
பக்குவத்தை உவந்தளித்தான்
கார்மேகம் பொழிவதுபோல்
கருணைமழை பொழிந்துநிற்கும்
பெருவரமாய் பெண்ணன்றோ
உருவாகி நிற்கின்றாள் !
கவிஞர். மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
![]()