இலங்கை

மிக முக்கிய புலனாய்வு தகவல்களை வழங்கியவரே சுரேஷ் சலே – முன்னாள் ராணுவத் தளபதி ஆதரவுக் குரல்

“போர் காலத்தில் மிக முக்கிய புலனாய்வுத் தகவல்களை வழங்கிய, தூரநோக்கு சிந்தனை உடைய ஒரு திறமையான இராணுவப் புலனாய்வு அதிகாரியே சுரேஷ் சலே” என்று முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“நாடு முன்னோக்கிச் செல்வதற்குத் தேசிய பாதுகாப்பு என்பது உறுதியான நிலையில் இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (சமாந்தரமாக) பயணிக்க வேண்டியவை ஆகும். இந்த விவகாரத்தில் நாட்டின் புலனாய்வுப் பிரிவின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

சுரேஷ் சலே இராணுவத்தில் இணைந்தபோது, நானே அவருக்குப் பயிற்சியளித்தேன். அவர் இராணுவத்தில் இருந்த ஒரு மிகத் திறமையான அதிகாரி ஆவார். அதுமட்டுமன்றி, புலனாய்வுப் பிரிவிலும் அவர் மிக முக்கியமான சேவைகளை ஆற்றியுள்ளார்.

தூரநோக்கு சிந்தனை, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையுடன் சேவையாற்றிய ஒரு அதிகாரியான அவர், போர் காலத்தில் தேவையான பல முக்கிய தகவல்களைத் திரட்டி வழங்கியதுடன், திட்டங்களையும் வகுத்துக் கொடுத்த ஒரு முக்கிய அதிகாரியாவார்” என்று முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button