இலங்கை

தமிழருக்குப் பாதகமாகவே இந்த அரசு செயற்படுகிறது; வீதிக்கு இறங்க நேரிடும் என்கிறார் சத்தியலிங்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச அதிகாரங்களைக்கூட மத்திய அரசுக்கு பறித்தெடுக்கும் ,மீளப்பெறும்

முன்மொழிவுகளை ஜனாதிபதி உடனடி யாக இரத்துச் செய்வதுடன் கிவுல் ஓயா திட்டத்தையும் அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும்.இல்லையேல் மக்கள் வீதிக்கு இறங்கி போராட நேரிடும் என எச்சரித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி.யான பத்மநாதன் சத்தியலிங்கம், தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் திட்டங்களே தேசிய மக்கள் சக்தி அர சாங்கத்தினால் வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற 2027ஆம் ஆண் டுக்கான வரவு செலவு திட்டம் மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற் றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
நாட்டு மக்களுக்கு முன்வைத்த வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற கொள்கைத் திட்டத்துக்கு அப்பாற் பட்ட வகையில் தேசிய மக்கள் சக்தி அர சாங்கம் செயற்படுகிது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தின் 194 210 வரையான பக்கங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஜனாதிபதிக்கும், அரசாங்கத் துக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஆட்சிக்கு வந்தவுடன் புதிய அரசிலய மைப்பை உருவாக்குவதாகவும், நிறை வேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறை மையை இரத்துச் செய்வதாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பதாகவும், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான சட்டங்களை நீக்கு வதாகவும் பல ஆண்டுகாலமாக தாமதப் படுத்தப்பட்டுள்ள மாகாணசபைத் தேர் தலை ஒரு ஆண்டுக்குள் நடத்துவதாகவும் உங்களினால் வாக்குறுதியளிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் அரசாங்கம் இந்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. குறைந்தபட்சம் ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளைக்கூட முன்னெடுக் கவில்லை.

செம்மணி மனித புதைக்குழி விவகா ரத்துக்கான நீதி தொடர்ச்சியாக மறுக்கப் படுகிறது. செம்மணி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஏற்க முடியாது.செம்மணி மனித புதை குழி விவ காரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்பதிலும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு இந்த அரசாங்கம் உரிய நடவ டிக்கைகளை முன்னெடுக்கும் என்பதிலும் பாரிய சந்தேகம்எழுந்துள்ளது
பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளக விசார ணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியக விசாரணையை கோரி தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற வேளை அது குறித்து அரசாங்கம் சுவனம் செலுத் தவில்லை.

இது பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் செயற்பாடு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட் டத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கு சொற்ப அளவில் வழங்கப்பட்ட அதிகா ரங்களைக்கூட மத்திய அரசுமீளப்பெறும் அல்லது பறித்தெடுக்கும் முன்மொழிவு கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வினால் நிதி அமைச்சர் என்ற வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த வரவு செல வுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். மாகாணசபைகளில் உள்ள அரச நிறுவ னங்களில் நிலவும் அடிப்படை பிரச்சி னைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காமல்
அவற்றை மத்திய அரசுக்குள் கொண்டு வரும் செயற்பாடுகளில் தான் இந்த அர சாங்கம் கவனம் செலுத்துகின்றது.பாதிக் கப்பட்ட குடும்பம் ஒன்று நிவாரணம் கேட்கும்போது குடும்பத்துக்கு நிவா ரணம் வழங்காமல், குடும்பத்தை தான் முழுமையாக பொறுப்பேற்கிறேன் என்று கூறுவதனைப் போன்றே ஜனாதிபதியின் செயற்பாடுகள் உள்ளன.

கிவுல் ஓயா திட்டத்துக்கு வரவு செல வுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. இந்த திட்டம் செயற்படுத்தப்பட் டால் தமிழ் மக்களின் காணிகளும், விவச ாய நிலங்களும் பறித்தெடுக்கப்படும். -இந்த திட்டத்துக்காக பல்லாயிரம் ஏக் கர் காடுகள் அழிக்கப்படும் . அவ்வாறு நிகழ்ந்தால் காட்டு யானைகள் மனித குடி யிருப்புக்களை அண்மித்த பகுதிகளுக்கு வரக்கூடும் அது மாறுப்பட்ட பிரச்சினை களை ஏற்படுத்தும்.

அரசாங்கத்தை கைப்பற்றி விட்டோம். ஆனால் இன்னும் அரச அதிகாரத்தை கைப் பற்றவில்லை என்று அமைச்சர் லால் காந்த அண்மையில் கூறியுள்ளார்.ஜனாதிபதியின் உத்தரவுகளைகூட செயற்படுத்தாத. செயற் படுத்த விரும்பாத. செயற்படுத்த மறுக்கும் அரச அதிகாரிகள் இன்று உள்ளனர்
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத் தினால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செல வுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட் டுள்ள குறைந்தபட்ச அதிகாரங்களைக்கூட மத்திய அரசுக்கு பறித்தெடுக்கும்,மீளப் பெறும் முன்மொழிவுகளை ஜனாதிபதி உடனடியாக இரத்துச் செய்வதுடன் .கிவுல் ஓயா திட்டத்தையும் அரசாங்கம் உடனடி யாக கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் வீதிக்கு இறங்கி போராட நேரிடும். தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் திட்டங்களே தேசிய மக்கள் சக்தி அரசாங் கத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்க வில் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங் களில் கிராமிய அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி அதற் குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.எமது மாவட்டங்களில் நிலவும் வேலையின்மை பிரச்சினைக்கு உடனடி யாக தீர்வு காண வேண்டும். மன்னார்-இராமேஸ்வரம் கப்பல் பயணத்தை ஆரம் பித்தால் வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றார்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *