உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காஃபி குடிக்கிறீங்களா?

உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காபி குடிப்பதால் உடம்பிற்கு ஆரோக்கியமா? தீமையா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடற்பயிற்சி
இன்றைய காலத்தில் உடற்பயிற்சி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மிக முக்கியமாக இருக்கின்றது. ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் ஆரோக்கியமான சாப்பாடு இல்லாமல் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையில் பலரும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
மேலும் தங்களது உடலை ஃபிட்டாக வைக்கவும் இன்று அதிகமாக ஆசைப்படுகின்றனர். உடல் எடை குறைப்பு, கட்டுக்கோப்பான உடல் இவற்றிற்கு உடற்பயிற்சி கட்டாயமாக இருக்கின்றது.
அந்த வகையில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தாலும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி செல்வதற்கு முன்பு எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதும், உடற்பயிற்சி முடிந்து எந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை பயிற்சியாளர் கூறுவதுண்டு.
அந்த வகையில் தற்போது உடற்பயிற்சிக்கு முன்பு சிலர் பிளாக் காஃபி பருகுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவை ஆரோக்கியமான பழக்கம் தானா? என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
பிளாக் காஃபி
உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காஃபி அருந்துவது எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று உணவியல் நிபுணர் கூறுகின்றனர்.
பிளாக் காஃபியாக மட்டுமே பருக வேண்டுமாம். அதில் சர்க்கரை, பால் சேர்த்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். நாள் முழுவதும் இரண்டு கப் பிளாக் காபி குடிப்பதில் எந்தவொரு பிரச்சனையையும் ஏற்படுத்தாதாம்.

அதே போன்று பிளாக் காபியில் நெய் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தையும் சிலர் செய்து வருகின்றனர். உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காபி குடிப்பதால் வளர்சிதை மாற்றத்தையும், ஆற்றல் மட்டத்தையும் அதிகரிப்பதற்கு உதவுகின்றது.
ஆனால் நெய் சேர்த்து பருகுவதால் எந்தவொரு ஆரோக்கிய பலன் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லையாம். சில உடல்நல கோளாறையும் ஏற்படுத்துமாம். காபியில் நெய் சேர்ப்பதால் அதிக கலோரிகள் சேர்வதுடன், இந்த பழக்கம் அனைவரது உடலும் ஏற்றுக்கொள்ளாது.

காபி குடிப்பது தவறு எதுவும் இல்லை என்று கூறப்பட்டாலும், நீங்கள் எடுத்துக்கொள்ளும் காஃபினின் அளவு மற்றும் அதன் வகை மற்றும் தயாரிப்பு முறை பொறுத்து உங்களது உடல் ஆரோக்கியம் இருப்பதாக கூறுகின்றனர்.
![]()