பெண் ஆசையால் 33 ஆண்டுகால பதவி பறிபோனது

தகாத உறவுகள் மற்றும் சீன உளவுப் புகார்கள் குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, என்விடியா நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நவீன செயற்கை நுண்ணறிவு (AI) சில்லுகள் (Chips) சந்தையில் சுமார் 90 சதவீதத்தைத் தன்வசம் வைத்துள்ள இந்நிறுவனம், உலகின் மிகப் பெறுமதி வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
33 ஆண்டுகாலப் பதவிக்காலம்
தனது தனிப்பட்ட உறவுகள் மற்றும் சாத்தியமான தேசிய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்துப் பல நாட்களாக நிலவிய தீவிர கண்காணிப்பைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (12) ஹுவாங் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை தனது மனைவிக்குத் துரோகம் இழைத்ததை ஒப்புக்கொண்ட ஹுவாங், தனது குடும்பத்தினரிடமும் என்விடியா ஊழியர்களிடமும் மன்னிப்புக் கோரியிருந்தார்.
சிறுவயதில் தாய்வானிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த ஹுவாங், 1993 ஆம் ஆண்டு என்விடியா நிறுவனத்தை இணைந்து நிறுவுவதற்கு முன்பிருந்தே தனது மனைவி லோரியுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றார்.
என்விடியா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை ஆரம்பத்தில் ஹுவாங்கிற்கு ஆதரவளித்ததுடன், அவரது தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை உள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.
மேலும், சீன உளவுத்துறையால் அவர் இலக்கு வைக்கப்பட்டாரா என்பது குறித்த செய்திகள் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றையும் தொடங்கியிருந்தது.
இருப்பினும், ஹுவாங்கிற்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கும் என்விடியாவின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரியான கிம்பர்லி பவலுடன் அவருக்குத் தகாத உறவு இருந்ததாக மேலதிகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அவரைப் பதவியிலிருந்து நீக்குவது குறித்துப் பணிப்பாளர் சபை கூடி ஆராயவுள்ளதாக புதன்கிழமை ‘ரொய்ட்டர்ஸ்’ (Reuters) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து, வியாழக்கிழமை அவரது இராஜினாமாவை நிறுவனம் அறிவித்தது. பணிப்பாளர் சபையிலிருந்தும் ஹுவாங் விலகியதால், முதன்மை நிறைவேற்று அதிகாரியாக அவரது 33 ஆண்டுகாலப் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
![]()