5 பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவம்; பிள்ளையான் உட்பட 3 பேருக்கு நவம்பர் 10 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு 5 பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி நேற்று செவ்வாய்க்கிழமை காணொளி ஊடாக உத்தரவிட்டார்.
இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர் பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17 ம் திகதி சிஜடி யினர் வழக்கு தாக்கல் செய்து அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்குநேற்று செவ்வாய்க்கிழமை திறந்த நீதிமன்றில் எடுக்கப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை ஆஜர்படுத்தியதுடன் பிள்ளையானை காணொளி மூலம் ஆஜர்படுத்தினர்.
இதனை தொடர்ந்து பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு லண்டனில் உள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும் முகமட் பாய்ஸ் தொடர்ந்து நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.
![]()