இலங்கை

பொலிஸார் கலைக்க முன் கலைந்து சென்ற பிக்குகள்;  நேற்று மாலை முதல் சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் விடுலை வலியுறுத்தி விகார மஹாதேவி பூங்காவில் பிக்குகள் உள்ளிட்ட குழுவினரால் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த சத்யாகிரக போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் விடுதலைக்காக தாம் தலையிட்டு அரசாங்கத்துடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தங்களுக்கு வழங்கிய எழுத்து மூலமான உறுதிமொழியை தொடர்ந்து தாம் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளதாக உலப்பன சுமங்கல தேரர் நேற்று மாலை தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி கடந்த 10ஆம் திகதி கண்டியில் இருந்து பேரணியாக வந்த பிக்குகள் குழுவினர் 15ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த பின்னர் முதலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவை தொடர்ந்து தமது சத்தியாக்கிரக போராட்டத்தை விகாரமஹாதேவி பூங்கா பகுதிக்கு மாற்றினர்.

இந்நிலையில் விகாரமஹாதேவி பூங்கா பகுதியிலும் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடைத்தரவுகளை பிறப்பித்திருந்தது. எனினும் அவர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த வகையில் 10ஆவது நாளாகவும் நேற்று போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில் பூங்கா வளாகத்தில் தங்கியுள்ள குழுவினர் காரணமாக பொது அமைதிக்கு கடும் இடையூறு ஏற்படக்கூடும் எனக் கூறி அந்த போராட்டத்தை கலைப்பதற்காக நீதிமன்றத்திற்கு அறிவித்து அனுமதி கோருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த வகையில் இன்றைய தினம் அவர்கள் பொலிஸாரால் கலைக்கப்படலாம் என்றும். இதற்போது பலர் கைதாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இவ்வாறான நிலைமையில் நேற்று மாலை குறிப்பிட்ட அறிவித்தலை விடுத்த பிக்குகள் குழு, குறிப்பிட்ட காரணத்தை கூறி போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *