இலங்கை

பொது மன்னிப்பு விவகாரம்; மைத்திரியின் தவறுக்கு ஞானசாரர் பொறுப்பல்ல

ஞானசார தேரருக்கு மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்படாமல் இருந்திருந்தால் அந்த தேரர் இப்போது தண்டனை காலத்தை பூர்த்தி செய்து விடுதலையாகி வெளியில் வந்திருப்பார். ஆனால் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கிய முறையில் தவறுகள் இருந்தது என்றால் அதற்கு ஞானசார தேரர் பொறுப்பாக முடியாது. இதனால் அவருக்கு மீண்டும் தண்டனை வழங்கப்பட்டதில் தவறுகள் இருக்கின்றது என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசர்நாய்க் கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களை பதிவு செய்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது ரோஹித அபேகுணவர்தன எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 2017ஆம் ஆண்டிலேயே நீதிமன்றத்தினால் 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அவர் எந்தவொரு அரசாங்கத்திடமும், எந்தவொரு ஜனாதிபதியிடமும் பொதுமன்னிப்பை கோரவில்லை. ஆனால் மைத்திரிபால சிறிசேன சிறைச்சாலைக்கு சென்று அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கினார்.

அந்த மன்னிப்பின் அடிப்படையில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், மீண்டும் முறைப்பாட்டு தரப்பினால் அந்த முறைமை பிழையானது என்று நீதிமன்றத்தை நாடியதை தொடர்ந்து அவர் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அன்று ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்காமல் இருந்திருந்தால் ஞானசார தேரர் இப்போது வெளியில் இருந்திருப்பார். 2024 அல்லது 2025ஆம் ஆண்டில் விடுதலையாகி வந்திருப்பார். அவர் எவரிடமும் பொதுமன்னிப்பை கோரவில்லை என்ற நிலையில், அவர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்தவர் ஜனாதிபதி என்றால், அவரின் பொதுமன்னிப்பு விடயத்தில் ஜனாதிபதி செயலகத் தவறிழைத்துள்ளது என்றால் ஞானசார தேரர் சிறையில் இருப்பது சரியா? அவர் வெளியில் இருக்க வேண்டியவரே. தயவு செய்து இதனை சீர் செய்யுங்கள். ஜனாதிபதிக்கு இதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளன. அவர் தண்டனை முடிந்து வெளியில் வந்திருக்க வேண்டிய காலமாகும். இதனால் தவறை சீர் செய்யுமாறு கோருகின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *