நாடாளுமன்றத்தில் காதலைப் பகிரங்கப்படுத்திய ஆஸ்திரேலியாவின் எம்.பி.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான காதல் தருணம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ஜோர்டன் லேன் (Jordan Lane), நாடாளுமன்றத்திற்குள்ளேயே தனது காதலியிடம் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து திருமணக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் காதலைப் பகிரங்கப்படுத்திய எம்.பி. ; சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி | Mp Reveals His Love In The Australian Parliament
இதன்போது, தனது காதலை வெளிப்படுத்தி திருமணக் கோரிக்கையை முன்வைத்த வேளையில், உணர்ச்சிப் பெருக்கினால் அவரது கைகள் நடுங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் அரசியல் விவாதங்கள் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இடம்பெறும் சூழலில், இவ்வாறானதொரு தனிப்பட்ட காதல் தருணம் அரங்கேறியமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பதிவு செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதுடன், இணையவாசிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறித்த காணொளியைப் பலரும் பகிர்ந்து வரும் நிலையில், நாடாளுமன்றத்திற்குள்ளேயே இடம்பெற்ற இந்தத் திருமணக் கோரிக்கை நிகழ்வு பேசுபொருளாக மாறியுள்ளது.
![]()