இலங்கை

ஞானசார தேரரின் காவி உடையைக் களைந்தது தவறு; ஶ்ரீதர்ம மகா சங்க சபை கடிதம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் துறவற நிலையை இழக்கும் நிலையை அடைந்த ஒரு துறவியாகவோ அல்லது அவரது காவியாடையைக் களைவதற்குத் தக்க பாரதூரமான காரணங்களோ தமது சங்க சபைக்குச் சுட்டிக்காட்டப்படவில்லை என கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீதர்ம மகா சங்க சபையின் கொடபிட்டியே ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

சாசன ரீதியாக அவர் தொடர்பில் ஒழுக் காற்று விசாரணையொன்றை நடத்தி காவி யாடையைக் களைவதா அல்லது காவியா டையுடன் இருக்க அனுமதிப்பதா என்பது
தமது சங்க சபைக்குரிய பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாய சுத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத் துள்ள அவர், ஞானசார தேரரின் காவியா டையை அகற்றாது, அவர் காவியாடையு டனே தோன்றுவதற்குச் சந்தர்ப்பமளிக்கு மாறு அதில் கேட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அல்லது நீதிமன்றத்தின் மேலா திக்கம் குறித்து எவ்வித எதிர்ப்பையும்
வெளியிடவில்லை எனினும், சிறைச்சா லையினுள் ஞானசார தேரரின் காவியாடை யைக் களைவது தொடர்பில் வெளியாகும் ஊடக அறிக்கைகள் குறித்துத் தமது சுவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
துறவியொருவர் காவியாடை அணி வது அல்லது காவியாடையைக் களை வது தொடர்பில் முழுமையான உரிமை குறித்த துறவிக்கும் அவர் சார்ந்த மகா ச ங்க சபைக்கு மட்டுமே உள்ளதாக இந்தக் கடிதத்தின் ஊடாக அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது எமது நாட்டில் தற்போது நடைமு றையிலுள்ள முறைமைக்கமைய, உரிய பீடங்களின் அல்லது மகா சங்கத்தின் மகா நாயக்க தேரரின் அனுமதியுடளே இடம் பெற வேண்டிய சாசன ரீதியான காரிய மாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சாசன விதிகளுக்கமைய அவ ரது காவியாடையை அணிந்திருக்கச் செய்வதும், தேரர் வெளியே அழைத்து
வரப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவருக்குரிய காவியாடையுடன் தோன்று வதற்குச் சந்தர்ப்பமளிப்பதும் இதுவரை சாசன ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாரம் பரிய விதியாகும் என்றும், அதனைப் புறக்கணிப் பது சாசனத்திற்கு வழங்கப்படும் தவறான முன்னுதாரணமாகும் என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *