கைதிகளின் உடையில் நீதிமன்றில் ஞானசாரர்; 23 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் சிறையிலடைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், காவி உடடைக்கு பதிலாக சிறைக் கைதிகளின் உடையில் நேற்று செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணை யொன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப டுத்தப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதியால் ஞானச ஈர தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியாகாது என உயர்நீ திமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, நீ திமன்ற அவமதிப்புக்காக விதிக்கப்பட்ட6 ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ் சிய காலத்தை நடைமுறைப்படுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதன்படி, நேற்று முன்தினம் சிறைச் சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவரது காவி உடை அகற்றப்பட்டு சிறைக் கைதிகளுக்கான உடை (சேர்ட் மற்றும் ஜம்பர்) வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பள்ளேதன்ன தெரிவித்தார்.
இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெறும் வேறுவழக்கு விசாரணையொன்றில் ஞானசார தேரருக்கு அண்மையில் பிறப்பித்த பிடியாணைக்கு அமைவாக, ஞானசார தேரர் நேற்று காலை சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன் போது அவர் காவி உடைக்கு பதிலாக சாதாரண சி றைக் கைதியின் வெள்ளை நிற உடையில் காணப்பட்டார்.
இஸ்லாம் மார்க்கத்தை இழிவுபடுத்திய தாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர் பான வழக்கிலேயே இவ்வாறு அவர் நேற்று மேல்நீதிமன்றத்தில் ஆஜர் செய் யப்பட்டார். இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்ட போது, இந்த வழக்கை மீண்டும் வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதேவேளை, ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமை தொடர்பில், அவர் சார்ந்த கோட்டே ஸ்ரீ கல்யாணி ச மாக்ரீதர்ம மகா சங்க சபையின் முதன் மைச் செயலாளர் அக்னிமஹா பண்டித பேராசிரியர் கொடபிடியே ராகுல அனு நாயக்க தேரர், சிறைச்சாலைகள் ஆணை யாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப் பியுள்ளார்.
பிக்குகளின் ஒழுக்க நெறிகளுக்கமைய அமைய ஞானசார தேரர், துறவி நிலை
யிலிருந்து முழுமையாக நீக்கப்படும் அளவுக்கு தவறிழைத்துள்ளதாக தமக்கு தெரியவில்லை என்றும், இதனால் அவ ரது காவி உடையை அகற்றும் அளவுக்கு பாரிய காரணம் எதுவும் தமது சங்க ச பைக்கு அறிக்கை செய்யப்படவில்லை என்றும், சாசன ரீதியாக அவர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையை நடத்தி, அவ ரது காவி உடையை அகற்றுவதா அல்லது தொடர்ந்து காவி உடையை வைத்திருக்க அனுமதிப்பதா என்பது தமது சங்க ச பைக்குரிய பொறுப்பாகும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()