இலங்கை
திரைமறைவிலிருந்து அரசை இயக்கும் குழு; விமல் வீரவன்ச கூறுகிறார்

தற்போதைய அரசாங்கத்தை திரைமறைவில் இயங்கும் ஒரு குழுவே வழிநடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து தொடர்ந்தும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறைகளை மேற்கொள்வதிலும் தோல்வி கண்டுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
![]()