திலீபனின் சிலை வைப்பு 3 மணி நேரம் விசாரணை

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் தியாக தீபம் திலீபனின் சிலை வைத்தமை தொடர்பிலான விசாரணைகளில் தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த இருவரிடம் பொலிஸார் 3 மணி நேரம் வரை விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்த தியாக தீபம் திலீபனின் சிலையை கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அகற்றியிருந்தனர்.
அதனை தொடர்ந்து சிலை வைத்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரைவான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதேவேளை சிலை வைப்பு தொடர்பில் , யாழ். மாநகர சபை உறுப்பினர் உள்ளிட்ட சிலரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள பொலிஸார் நேற்றைய தினம் தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த வரதராஜான் பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் ஆகியோரிடம் வாக்கு மூலம் பெற யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் அழைத்திருந்தனர்.
இதன்படி இருவரிடமும் காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலான மூன்று மணி நேரம் வரை யாழ்ப்பாணம் தலைமைய பொலிஸ் நிலையத்தில் உள்ள பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து பொலிஸார் வாக்கு மூலங்களை பெற்றனர்.
![]()