கையெழுத்து வேட்டையைத் தடுக்க முயன்ற பொலிஸார்; சுதந்திர சதுக்கத்தில் கடும் வாக்குவாதம்!

பயிர்ச்செய்கை தொடர்பான நிறுவனங்கள் சிலவற்றில் செய்யப்பட்டுள்ள முதலீட்டுப் பணத்தை விடுவிக்குமாறு கோரி சிவில் அமைப்பொன்றினால் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்ட போது, பொலிஸாருக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
இலங்கை மத்திய வங்கியினால் சில விவசாய முதலீட்டு நிறுவனங்கள் இடைநிறுத்தப்பட்டமையால், அதில் முதலீடு செய்த மக்கள் பெரும் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனால் அந்த பணத்தை விடுவிக்குமாறும் கோரி சிவில் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சிவில் புலனாய்வு முன்னணியின் அழைப்பாளர் சஞ்சய மஹவத்த தலைமையில் இடம்பெற்ற போது அவ்விடத்திற்கு வந்த பொலிஸார். நீங்கள் சுதந்திர சதுக்கத்திற்கு கீழே சென்று இதனை நடத்தலாம். இந்த இடத்தில் நடத்த வேண்டாம் என்று பொலிஸார் கூறிய நிலையில் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
![]()