இலங்கை

தூசு தட்டப்படும் முக்கிய வழக்கு.. அவசரமாக நாட்டை விட்டு வெளியேறிய ரணில்

பட்டலந்த தடுப்பு முகாமில் இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பில் மீண்டுமொரு விசாரணையை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.

அதன் பிரகாரம் பட்டலந்த சித்திரவதை முகாமில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என தற்போதைக்கு சட்டமா அதிபர் தனது அவதானிப்புகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அவதானிப்புகளும் கண்காணிப்பு அறிக்கைகளும் சட்டமா அதிபரினால் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனினும், கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட பட்டலந்த ஆணைக்குழுவின் சாட்சியங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக நேரடியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது என்றும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்காரணமாக, முறையான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு மேலதிக சட்டப்பூர்வ விசாரணைகள் அவசியமாகின்றன எனவும் சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மருத்துவத் தேவைக்காக நேற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்டலந்த முகாமில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *