இலங்கை

ஊழல் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தேன்: ஊழல் செய்யவில்லை; இப்படி கூறுகிறார் பந்துல

ஊழல் மிக்க அரசாங்கங்களில் அமைச்சு பதவிகளை வகித்திருந்தாலும் நான் ஊழலில் ஈடுபடவில்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வெள்ளிக்கிழமை (02) முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாத சம்பளத்தை கூட சமூக பணிகளுக்காகவே நான் வழங்கியுள்ளேன். ஊழல் விசாரணைகளுக்கு ஆணைக்குழு அழைத்தால் வருவேன். தவறு செய்யாத காரணத்தால் ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் வந்து செல்வேன் எனவும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ”2007.03.21 ஆம் திகதி வர்த்தகத்துறை மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த போது அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனை பத்திரம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கமைய ஆணைக்குழுவில் முன்னிலையாகினேன். ஊழல் மோசடிகளுடன் நான் எவ்விதத்திலும் தொடர்புப்படாத காரணத்தால் ஆர்ப்பாட்டங்கள் ஏதும் இல்லாமல் அமைதியாக ஆணைக்குழுவுக்கு வருகைத் தந்தேன்.

ஊழல்மிக்க அரசாங்கங்களில் அமைச்சு பதவிகளை வகித்திருந்தாலும் நான் ஊழலில் ஈடுபடவில்லை.

மாத சம்பளத்தை கூட சமூக பணிகளுக்காகவே நான் வழங்கியுள்ளேன். ஊழல் விசாரணைகளுக்கு ஆணைக்குழு அழைத்தால் வருவேன்.

ஊழல்வாதிகளுடனும், மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களுடனும் ஒன்றிணைந்து செய்றபட போவதில்லை. புத்தகம் எழுதுவதற்கு ஓய்வுக்காலத்தை செலவிடுகிறேன்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *