இலங்கை

அடுத்த மூன்று மாதங்களுக்குள் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு வாழ்நாள் சிறை வரும்

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது என வாமே கேந்திரய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாமிர பெரேரா தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனது குடும்பத்தினரையும் பிள்ளைகளையும் திருட்டு மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடச் செய்ததன் தவிர்க்க முடியாத விளைவு இது. இந்த விடயம் முழு நாட்டிற்கும் ஒரு வலுவான செய்தியை உணர்த்துகிறது.

ஒரு நாட்டை முழுமையான திவால் நிலைக்குத் தள்ளிய குடும்பம் உலக வரலாற்றிலேயே ராஜபக்ச குடும்பம் மட்டுமே என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

இதனால் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாது போகும்.

எனவே இலங்கையின் எதிர்கால நலன் கருதி இந்தக் குடும்பத்தை அரசியலிலிருந்து முற்றாக அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *