கவிதைகள்
ரசிகையே!…. கவிதை… முல்லைஅமுதன்

கொஞ்சம் உறங்கிக்கொள்கிறேனே
கனவில் தான்
நெருக்கமாய் இருப்பதாய் உணர்கிறேன்.
வாழ்க்கை சமயங்களில்
காலாவதியாகிவிட்டுமிருக்கலாம்.
கனவில்தான்
அன்பாய் இருக்கிறாய்.
நினைக்கும் போதெல்லாம் தேநீர் தருகிறாய்.
கடனாகவேனும்
முத்தத்தை தந்துவிட்டுச் செல்கிறாய்.
கனவில் தான்
உன் மௌனம் ரசிக்க முடிகிறது என்னால்.
ரசிகையே!
மடிப்புக் கலையாத
மடல் எழுதிவைத்திருக்கிறேன்.
முடிந்தால்
ரசித்துபடி.
அன்றேல்,
என்னையும் எரித்துவிட்டுச் செல்!!
![]()