கவிதைகள்

பழுத்த இலை…. கவிதை… முல்லைஅமுதன்

இன்றெனப் பார்த்து
கூண்டைத் திறந்துவிட்டான் எஜமான்.
மலையப் பார்த்தல்ல
தன் கையில் கிடைத்த கல்லை நினைத்தே
ஏனோ வருந்தினான்.

கோயிலிலிருந்து வந்திருந்த
அம்மா பூக்களைத் தந்துசென்றாள்.
வாடிவிடாமல் பார்த்துக்கொள்ளவேணும்..
கரிசனையும் எழுந்தது.
மகளிடம் கொடுத்தேன்.

மறுநாளும் அவள் முகம்போல
எப்படி
பூக்களும் புதுசாய் தெரிந்தது.
மனைவியை அழைத்தேன்.

கோயில் மூடியிருக்குமே
என்றாள்
என்றுமில்லாதவாறு…

தனியே இறங்கினேன்.
வெளியே…
எல்லாமே மாறியிருந்தன.
மலர்ச்சியாக எதுவுமே இல்லை.

வாடிய மலர்களை
குப்பையில் கொட்டிக்கொண்டிருந்தார் ஒருவர்.
மரம் தன்னிலிருந்து
பழுத்த இலைகளை உதிர்த்தன..

கனவும்,  கவிதையும் ஒவ்வொன்றாக
உதிர்ந்துகொண்டிருந்தன..

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *