இலங்கை

ஊழல் விவகாரத்தில் கடந்த அரசாங்கங்களை விட மும்முரமாக, துணிவாக எல்லாம் செய்யத் துணிந்தவர்கள், தமிழ் மக்களுக்குரிய எந்த விடயத்திலேயும் தொட்டுக் கூடப் பார்க்காமல் இருக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்

செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விமர்சித்தார்.
சாவகச்சேரியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து காண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சமயோசிதமாக இந்த காலத்திற்கு மிகவும் தேவைப்பட்ட இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஒழுங்கு செய்திருக்கிற ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு என்னுடைய நன்றிகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

வந்தக் கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும் பான்மை கொடுப்பது அபாயகரமானது என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம். ஆனாலும், இது எங்கள் மக்கள் மத்தியிலே பழக்கப்பட்ட ஒரு விஷயமாக போய்விட்டது.
ஜனாதிபதித் தேர்தலிலே அனுரகுமார திசா நாயக்க, அதுவும் 12 சதவீத வாக்குகளால் தான் வெற்றி பெற்றார். இதற்கு முன்னர் வெற்றி பெற்ற அனைத்து ஜனாதிபதிகளும் 50 சதவிதத் சிற்கு கூடுதலாக பெற்றிருந்தார்கள். ஆனாலும் அவர்தான் ஜனாதிபதி என்று தெரிந்த உடனே, பொதுத் தேர்தலில் ஒரு அலையாக மக்கள் அந்தக் கட்சிக்கு வாக்களித்தார்கள். எங்களு டைய பிரதேசங்களிலேயும் அப்படியானதவறு நடந்தது. ஆனால் ஆறு மாத காலத்திலே, உள் ளூராட்சி சபை தேர்தல்களிலே அது ஓரளவு மக்களால் உணரப்பட்டது.

நாட்டை ஆட்சி செய்கிறவர்கள், அதிகாரங் கள் பகிரப்படுமெனச் சொன்னாலும், அற்ப சொற்ப அதிகாரங்களோடு இருக்கிற மாகாண சபையும் இயங்காமல் இருக்கிறது.

சர்வாதிகார ஆட்சி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை என்று நீங்களெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த அந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழு சர்வா திகாரியாக நடத்துகிறவர் நீங்கள்தான் என நான் ஒருதடவை ஜனாதிபதியோடு பேசுகிற போது சொன்னேன். ஏவென்றால் இதற்கு முன்னர் இருந்தவர்கள் இந்த அளவுக்கு அதிகாரம் படைத்தவர்களாக இருந்திருக்கவில்லை.

மாகாண சபைகளுக்கு அதிகாரம் கொடுக்கப் ட்ட பிறகு, சட்டவாக்கல் அதிகாரம் சில சில விடயதானங்களிவே மாகாண சபைக்கு கொடுக் கப்பட்டிருக்கிறது. அதை நிறைவேற்றுகிற அதிகாரமும் மாகாண சபை அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது, மத்திய அரசாங்கத்திற்கு இல்லாத அந்த அதிகாரங்களையும் தன்னு டைய முகவர்கள் மூலமாக ஒன்பது மாகாணங் களிலேயும் நிறைவேற்றுகிற நிறைவேற்று அதிகார ஜனாதிபதி நீங்கள்தான் என்று நாம் அவருக்கு சொல்லியிருக்கிறோம்.

அப்படியாக இரண்டு தடவைகள் ஆட்சியை பற்றுவதற்கு ஆயுதமெடுத்துப் போராடி அதிலே தோற்றவர் முறைமை மாற்றம் என்கின்ற ஒரு கோஷத் தோடு மக்களுடைய ஆதரவைப் பெற்று ஆட் சியிலே அமர்ந்திருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் ஊழலுக்கு, லஞ்சம் பெறு வதற்கு, பாதான கோஷ்டிகளுக்கு. அதேபோல போதைவஸ்து வியாபாரம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது. அதனை நாங் கன் வரவேற்கிறோம்.

என்றும் செய்யப்படாத விடயங்களை அவர்கள் செய்கிறார்கள். இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் என்ன செய்வார்கள் என்றால், எதிர்க்கட்சியிலே இருக்கிற போது மற்றைய பக்கத்தை பார்த்து கூச்சலிடுவார்கள். ஊழல், லஞ்சம் என்றெல் லாம் சொல்வார்கள்.ஆனால் அவர்கள் ஆட்சி க்கு வந்துவிட்டால், அவர்களும் அதையே செய்வார்கள். முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் அந்தக் கூக்குரலை எழுப்புவார்கள். ஆனால் அமைச்சர்கள் எவருக்கும் எதிராக எந்த நடவடிக் கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. எவரும் ஊழல் லஞ்சக் குற்றச்சாட்டிலே குற்றவாளிய கண்டறியப்படவும் இல்லை.ஏனென்றால் அவர்களுக்குள்ளே ஒரு இணக்கப்பாடு உண்டு.

ஆனால் வெளியிலே இருந்து மூன்றாம் தரப் பாக இருந்து தற்போது ஆட்சிக்கு வந்தி வந்திருப்பவர் கள் இருவருடைய முதுகையும் சொறியாமல், இரு தரப்புக்கும் எதிராக நடவடிக்கை எடுத்தி ருக்கிறார்கள். வரவேற்கத்தக்க விடயம்.
அவ்வளவு மும்முரமாக, அவ்வளவு துணி வாக அதையெல்லாம் செய்யத் துணிந்தவர்கள் சிந்தவர்கள், தமிழ் மக்களுக்குரிய எந்த விடயத்திலேயும் தொட்டுக் கூடப் பார்க்காமல் இருக்கிறார்கள். இது தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஏனென்று சொன்னால், இன்றைய தினம் இந்த அரசாங்கத்திற்கு எதிராக முன்னர் முற்றுமுழு தாக ஊழலாட்சி செய்தவர்களுடைய பெரிய தொரு பேரணி, கூட்டம் அனுராதபுரத்திலே நடைபெற இருக்கிறது. இந்த ந்த அரசாங்கம் என்ன சொல்ல நினைக்கும்? இவர்களும் அவர்களும் சேர்ந்து, அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று. இப்பொழுதும் இந்த அரசாங்கம் அதற்கு எதிராக எடுக்கிற நடவடிக் அச்களுக்கு நாங்கள் முழு ஆதரவையும் வெளிப்படையாகத் தெரிவிக்கிறோம். ஆனால் எங்களுடைய ஆதங்கம் என்ன?
இதையெல்லாம் சரித்திரத்திலேயே முதல் தடவையாக செய்யத் துணிகிற நீங்கள், தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி ஒன்றைக் கூட ஒரு சிறிதளவாவது கூட இன்னும் செய் யலில்லை காணிகளை விடுவிப்போம் என்று சொன்னீர்கள்.
கடந்த காலங்களில் காணிகள் விடுவிந்த போது யாராவது எதிர்த்தார்களா? தெற்கில் கூட எவராவது எதிர்த்தார்களா? இல்லையே!

சுலபமாக செய்யக்கூடிய, ஆனால் எங்களு டைய வாழ்வுக்கு அத்திவாரமாக இருக்கிற எங்களுடைய நிலங்களை விடுவிக்காமள் மற்ற மற்ற விடயங்களையெல்லாம் செய்து கொண்டி ருக்கிறீர்கள். அதை நாங்கள் கண்டிக்கிறோம்!’ இதையெல்லாம் உங்கனால் செய்ய முடியு மாக இருந்தால், நிச்சயமாக தமிழ் மக்களுக்கு கொடுத்திருக்கிற இந்த வாக்குறுதிகளை உங்களால் எப்போதோ செய்து முடித்திருக்க முடியும்.

நாள் அன்றைய தினம் அந்த மக்களோடு பேசுகிற போது சொன்னேன். 2,176 காணிகள் வழக்குகள் இன்னமும் நிலுவையிலே இருக்கி றது. 700 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாகச் செ எல்லியிருக்கிறார்கள், அது எதுவென்று அடை யாளப்படுத்தி காட்டச் சொல்லிச் சொன்னால் இன்னும் காட்டாமல் இருக்கிறார்கள் என்று சொன்னேன். ஆனால் இப்பொழுது எங்களுக்கு காட்டியிருக்கிறார்கள்.”
அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தால், அந்த 700 ஏக்கர் காணி அத்தனையும் 2024ம் ஆண்டு ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளை நாங்கள் விடுவிக் சுப் போகிறோம் என்று நீதிமன்றத்திலே வந்து சொல்லுகிறார்கள்.

இது முதல்ல பாராளுமன்றத் தேர்தலுக்கு முதல் ஒரு வீதியை விடுவித்ததைப் போல, 615 மீட்டர் விதி. அது ஏற்கனவே விடுவிக்கப்பட்ட வீதி. அதிலே ஏற்கனவே 2024-ல் விடுவிக்கப் பட்டது என்று ஒரு பலகை கூட இருக்கிறது. பலாலி வீதியைத் திறந்திருப்பதாகச் செ என்னார்கள். இரவில் போக முடியாது. அதான் வீதித் திறப்பு. இந்த இரண்டையும் தவிர, வடக்கில் ஒரு அங்குல நிலம் கூட விடுவிக் கப்படவில்லை. கிழக்கில் சாணக்கியனின் ஆக்கினை தாங்காமல் இரண்டு நிலங்களை விடுவித்திருக்கிறார்கள்.ஆனால் இங்கே எது
வும் செய்யவில்லை. செய்யக்கூடிய மிகச் சிறிய விஷயத்தைக்கூட செய்யவில்லை. இப்பொழுது ஜனாதிபதி சொல்லுகிறார், இராணுவத்திடம் ஒரு அறிக்கை கேட்டிருக்கிறா ராம். வாய் கிழிய கத்தினாரே, எங்களோடு சேர்ந்து தனியார் காணிகள் எல்லாம் விடுவிக்கப்பட வேண்டும் என்று, அப்போ சொன்னாரே. இராணுவத்திடம் கேட்டுத்தான் விடுவிக்க வேண்டும் என்று? எதிர்க்கட்சியில் இருக்கிற போது எங்களோடு சேர்ந்து எல்லாம் சொன் னார்.அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே இருக்கிற முதலாவது வாக்குறுதி, புதிய அரசிய
இன்னும் ?தொட்டுக் கூட எங்களுடைய கட்சியோடு வந்து பேசிய போது சொன்னார், தமிழ் மக்களுக்கான தீர்வு அந்த புதிய அரசியலமைப்பிலே முழுமையாக இருக்கும் என்று.ஆனால் இன்னமும் தொடக் கூட இல்லை. பௌத்த மதபீடத் தலைவர் களே செய்ய வேண்டாம் என்று சொல்லுகிற 23வது திருத்தத்தைக் கூட செய்கிறார்கள்! அந்த அளவுக்கு துணிவு இருக்கு.
அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது அதைச் செய்ய நினைக்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற் குத்தான் ஒரு தனிநபர் சட்டமூலத்தை விஜித ஹேரத் கொண்டுவந்திருந்தார். இதைச் செய்ய நினைக்கவில்லை.

ஆனால் இப்பொழுது தங்களுடைய ஆட்சி யை முழுமையாக இந்த நாட்டிலே ஒரு கட்சி ஆட்சியாக மாற்றுவதற்கு நடவடிக்கை நடக் கிறது.
அதிகாரப் பிரிவு என்ற எதுவும் கிடையாது. எல்லாவற்றையும் தங்களுடைய கைக்குள்ளே கொண்டு வருவதற்கான நடவடிக்கை நடக்கிற து. இவற்றுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *