இலங்கை

நாமலைத் துரத்தும் வழக்குகள்!; பணமோசடி விவகாரத்தில் சிக்குவாரா?

பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.

எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌ஷ, நாளை மறுதினம் 16 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

முன்னதாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன (இவர் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்) மற்றும் அவரது மனைவி என். விஜேநாயக்க ஆகியோர் இவ்வழக்கில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டிருந்தனர். இதற்கமைய, நாமல் ராஜபக்‌ஷவும் இதில் ஒரு சந்தேக நபராக சேர்க்கப்படுவார்.

லஞ்ச வழக்கு தொடர்பில் நாமல் எதிர்வரும்18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *