இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று FCID க்கு?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று முற்பகல் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.

அங்கு அவர் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் அளித்ததன் பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வௌியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *