உலகம்

எமனுடன் போராட்டம் – நேபாளத்தில் 11 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி

நேபாளத்தின் கொடிய வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி ஒருவர் 11 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மூதாட்டி இறந்துவிட்டதாக நம்பிய அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கிற்காக தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த மீட்பு பணி இடம்பெற்றுள்ளது.

பேரழிவிற்குள்ளான பெட்ராவதி கிராமத்தில் இடிந்து விழுந்த அவரது வீட்டிற்குள் இருந்து அவர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நான்கு மாடிகளைக் கொண்ட குறித்த வீடு அடித்துச் செல்லப்பட்டு சகதிகளின் நடுவில் புதையுண்டிருந்தது.

மீட்பு பணியாளர்கள் அவ்வழியே சென்றபொது என்னைக் காப்பாற்றுங்கள் என்ற குரல் ஒலித்ததாகவும், இதனைத் தொடர்ந்தே மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *