இலங்கை

ராஜபக்ச குடும்பத்தை தொடரும் விசாரணைகள்! மீண்டும் சிக்கலில் சிக்கிய ஷிரந்தி ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் சிரிலிய சவிய அமைப்பு, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET Scan இயந்திரம் ஒன்றை வழங்குவதற்காக நிதி திரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிரிலிய சவிய அமைப்பு, PET Scan இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் நிதியுதவி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, தேசிய சேமிப்பு வங்கியும் குறித்த திட்டத்திற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நிதி திரட்டு

இந்த விவகாரம் தொடர்பில், அப்போது தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் காரியவசத்திடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட PET Scan இயந்திரம், சிரிலிய சவிய அமைப்பினால் கொள்வனவு செய்யப்படவில்லை என்றும், அது சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட PET Scan இயந்திரத்தை கொள்வனவு செய்வதாகக் கூறி நிதி திரட்டப்பட்டதன் மூலம் மோசடி ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *