இலங்கை

நாமலை காட்டிக்கொடுத்த நபருக்கு உயிரச்சுறுத்தல்; வெளிநாடுகளில் இருந்து தொடரும் விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு நிமல் பெரேரா என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சி அவுஸ்திரேலியாவிலிருந்து விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியம் அளித்துள்ளார். அவர் அவுஸ்திரேலிய சட்டத்தின் கீழ் சத்தியப் பிரமாண அறிக்கையையும் வழங்கியுள்ளார்.

இந்த விசாரணை இலங்கை அதிகாரிகளால் மட்டுமல்லாது, பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இலங்கைசுற்றுலா

சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வந்த பணத்தில் இருந்து, 100 மில்லியன் ரூபாய் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த பிறகு, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அஞ்சுவதால் தான் இலங்கை வரத் தயங்குகிறார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *