இந்தியா
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு; டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் வழக்கில் தொழிலதிபர் பிரவீன் கணேசன் என்பவரை சென்னை இணையக் குற்றங்களுக்கான காவல்துறையினர் டெல்லி வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் தொழிலதிபர் பிரவீன் கணேசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்டு பின்னர் அதனை நீக்கியதாகக் கூறப்படுகிறது.
எனினும் அந்தப் பதிவு வைரலானதை அடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்கை பதிவு செய்தனர்.
இதனையடுத்து அவருக்கு எதிராக கண்காணிப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச வானூர்தி நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற பிரவீன் கணேசனை காவல்துறையினர் கைது செய்தனர்.
![]()